இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதுவரை பார்த்திராத வகையில் பிரத்யேகமான மஞ்சள் நிறத்தில் இந்தியாவை சேர்ந்த கியா செல்டோஸ் மாடலின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

கடந்த ஆண்டில் அறிமுகமானதை தொடர்ந்து கியா மோட்டார்ஸின் முதன் இந்திய அறிமுக மாடலான செல்டோஸ் எஸ்யூவி சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு இந்த காரின் கம்பீரமான தோற்றம் தான் மிக முக்கிய காரணம்.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்தியாவில் செல்டோஸ் மாடலுக்கு வழங்கிவரும் நிறத்தேர்வுகளை காட்டிலும் கூடுதலான சில நிறங்களில் வெளிநாட்டு சந்தைகளில் இந்த காரை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் கொடுக்கப்படாமல் வெளிநாட்டு சந்தைகளில் கொடுக்கப்படும் நிறதேர்வுகளில் ஒன்று மஞ்சள்.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

ஆனால் தற்போது மஞ்சள் நிறத்தில் இந்தியாவை சேர்ந்த கியா செல்டோஸ் கார் ஒன்றின் படங்கள் கியாசெல்டோஸ் லவ்வர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நம்பர் ப்ளேட் உடன் காட்சியளிக்கும் இந்த கார் செல்டோஸின் ஜிடிஎக்ஸ் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும்.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதற்கு கொடுக்கப்பட்டுள்ள 3M மஞ்சள் மேட் வ்ராப் காரை முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இதனால் சாலையில் மற்ற செல்டோஸ் கார்களுடன் பார்த்தாலும் இந்த செல்டோஸ் கார் வேறுப்பட்டு தெரியும். கியா நிறுவனம் செல்டோஸிற்கு ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பை வழங்கி வந்தாலும், இந்த கார் முழுவதும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே ஜொலிக்கிறது.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்த வ்ராப்பிற்கு செலவான தொகை குறித்த தகவல் எதுவும் கிடைக்க பெறவில்லை. முன்புற க்ரில் அமைப்பு கருப்பு நிறத்தில் சில சிவப்பு நிற பகுதிகளை கொண்டுள்ளது. இவ்வாறான க்ரில் செல்டோஸின் ஜிடி வேரியண்ட்டில் தான் வழங்கப்படும். இந்தியாவில் காரின் நிறத்தை மாற்றுவது சட்டப்படி குற்றமாகும்.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

ஆனால் ஒரிஜினல் நிறம் தெரியும்படி அதன் மீது இவ்வாறு வ்ராப் ஒட்டுவது அனுமதிப்படுகிறது. இருப்பினும் இந்த காரை எடுத்து கொண்டு சாலையில் சென்றால் 2ல் 1 போலீஸாராவது காரை நிறுத்தி குறுக்கு விசாரணை நடத்துவர். இந்த மஞ்சள் நிறம் செல்டோஸிற்கு தனித்துவமான நிறமாக வழங்கப்படுகிறது.

இதுவரை இப்படியொரு கியா செல்டோஸ் காரை இந்தியாவில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்தியாவில் இந்த நிறத்தேர்வை கொண்டுவரும் திட்டம் தற்போதைக்கு இந்நிறுவனத்திடம் இல்லை என்றாலும், அதன் தாயக நாடான தென் கொரியா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் செல்டோஸ் கார் இந்த மஞ்சள் நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Kia Seltos looks fabulous in this bright yellow wrap
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X