எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் கான்செப்ட் கார் பிப்ரவரி மாத துவத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு செல்டோஸ் எஸ்யூவி மாடலின் புதிய டாப் வேரியண்ட் கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

பேட்ஆஸ் பை டிசைன் என்ற டேக்லைன் உடன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கியா செல்டோஸின் இந்த கான்செப்ட் வாகனம் சிறிய அளவு எஸ்யூவிகளுக்கு உண்டான கம்பீரமான தோற்றத்தை வெளிப்புறத்தில் கொண்டிருந்தது. இதனால் இந்த கான்செப்ட் கார், கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

சொனேட் மற்றும் கார்னிவல் எம்பிவிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த செல்டோஸ் எக்ஸ்-லைன் மாடல் தற்போதைய கியா செல்டோஸின் டிசைன், செயல்படு திறன், உட்புற கேபினின் தோற்றம் மற்றும் சவுகரியமான பயணம் உள்ளிட்டவற்றுடன் தன்னுடைய அடையாளத்திற்காக அப்டேட்டான தொழிற்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

குறிப்பாக முரட்டுத்தனமான ஸ்டைலிங் பாகங்களை எக்ஸ்-லைன் கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் செல்டோஸின் டாப் வேரியண்ட்டில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

செல்டேஸ் எஸ்யூவியின் இந்த ஸ்பெஷல் எடிசன் இந்திய சந்தையில் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்த வருட இறுதியில் பண்டிக்கை காலத்தில் இந்த புதிய எஸ்யூவி காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

செல்டோஸ் மாடலின் தற்போதைய வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்பெஷல் எடிசன் கார், கருமையான நிறத்தை மேற்கூரையிலும், பளபளப்பான டார்க் க்ரே நிறத்தை ரூஃப்-ற்கு அடியில் உள்ள மற்ற உடற் பாக பேனல்களிலும் கொண்டுள்ளது.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

அதேபோல் வெளிப்புறத்தில் சில பாகங்களை பிளாஸ்டிக்கிலும் செல்டோஸின் இந்த டாப் வேரியண்ட் கார் பெறவுள்ளது. அன்றாட நகரப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் இந்த எஸ்யூவி கார் தோற்றமளித்தாலும், பம்பர்கள், லேம்ப் மற்றும் கிராஃபிக்ஸ் டிசைன்களை ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் கொண்டிருந்ததை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் போதே பார்த்தோம்.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

செல்டோஸ் எஸ்யூவியின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள பம்பர்கள் இந்த ஸ்பெஷல் எடிசனால் சில்வர் நிறத்தில் இருந்து ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. முன்புற க்ரில் பகுதி கருப்பு நிறத்தில் ஒரு ஓரத்தில் ஆரஞ்ச் நிறத்தில் எக்ஸ்-லைன் என்ற லோகோவை கொண்டுள்ளது.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

இவை மட்டுமின்றி அலாய் சக்கரங்களும் கருப்பு நிற பெயிண்ட் அமைப்பை காரின் உடற் நிறத்திற்கு தகுந்தாற்போல் கொண்டுள்ளன. டிசைன் பாகங்களை தவிர்த்து இந்த ஸ்பெஷல் எடிசன் கியா செல்டோஸ் மாடலின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

எக்ஸ்-லைன் கான்செப்ட்டில் உருவாகும் கியா செல்டோஸின் டாப் வேரியண்ட்...!

தற்போது உள்ள கியா செல்டோஸ் மாடலே உயர்ரக தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவரும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Kia Seltos new top trim based on X-line will launch in few months
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X