கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செல்டோஸ் எஸ்யூவியுடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்திருந்தது. ஆரம்பத்தில் இருந்து சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் செல்டோஸ் எஸ்யூவி அறிமுகத்திற்கு அடுத்த சில மாதங்களில் சராசரியாக 15,000 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்திருந்தது.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

இதன் விற்பனை குறித்து வெளிவந்துள்ள தகவல்களின்படி செல்டோஸ் எஸ்யூவி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 45,494 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 24,920 பெட்ரோல் வேரியண்ட்களும் 20,574 டீசல் வேரியண்ட்களும் அடங்கும்.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

பெட்ரோல் வேரியண்ட்டை அதிகமானோர் தேர்ந்தெடுத்ததற்கு அதன் அதிகப்படியான ஸ்டாக் எண்ணிக்கையும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களும் தற்சமயம் டீசல் வேரியண்ட்களை விட பெட்ரோல் வேரியண்ட்டை தான் முதன்மையான தேர்வாக கொண்டுள்ளனர்.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவியில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளை வழங்குகிறது. இதில் சந்தையில் பிரபலமான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

மற்றொரு 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரு பெட்ரோல் என்ஜின்களுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக இணைக்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதலாக தேர்வாக சிவிடி கியர்பாக்ஸும், 1.4 லிட்டர் என்ஜினிற்கு டிசிடி கியர்பாக்ஸும் வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

டீசல் வேரியண்ட்டை பொறுத்தவரையில் இதில் வழங்கப்படுகின்ற 1.5 லிட்டர் என்ஜின் 115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், ஐவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்ப்படுகிறது.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

கியா நிறுவனத்தின் மிட் சைஸ் எஸ்யூவி மாடலாக சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற செல்டோஸில் ஏகப்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. டெக்-லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரு ட்ரிம் லெவல்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

அதிகப்பட்சமாக ரூ.17 லட்சம் வரையில் செல்டோஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. கூர்மையான லைன்கள் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகளால் இந்திய சந்தையில் பிரபலமான எஸ்யூவி ரக காராக உள்ள செல்டோஸிற்கு எம்ஜி ஹெக்டர், டாடா ஹெரியர் மற்றும் சமீபத்தில் அறிமுகமான 2020 ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்டவை போட்டி மாடல்களாக உள்ளன.

Most Read Articles
English summary
Kia Seltos Petrol Vs Diesel Sales Report: More Customers Prefer Petrol-Powered Seltos Variants
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X