கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கார் விற்பனையை துவங்கியது. முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.9.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்த இந்த புதிய எஸ்யூவி கார் இந்திய வாடிக்கையாளர்களை வசியம் செய்துவிட்டது.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

விற்பனையில் கியா செல்டோஸ் கார் றெக்கை கட்டி பறந்து வருவதுடன் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மாதங்களில் இந்தியாவின் நம்பர்-1 மாடலாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில், கியா செல்டோஸ் கார் விலை ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

அறிமுக விலைச் சலுகையாகவே இந்த கார் ரூ.9.69 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் கியா மோட்டார்ஸ் தெரிவித்தது. மேலும், முன்பதிவு செய்து டிசம்பர் 31ந் தேதி வரை டெலிவிரி பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பழைய விலை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

இதனால், முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில், ஜனவரி 2 (நேற்று) முதல் கியா செல்டோஸ் காரின் விலை ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வேரியண்ட்டுக்கு தக்கவாறு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Model Trim Increase at Ex-showroom
Tech line - Petrol HTE Rs 20,000
All other trims Rs 30,000
GT line - Petrol All trims Rs 30,000
Tech line - Diesel All trims Rs 35,000
GTX+AT Rs 35,000
கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

கியா செல்டோஸ் காரின் டெக் லைன் மாடல்களில் எச்டிஇ என்ற பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.20,000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.9.89 லட்சம் என்ற விலையில் இனி விற்பனைக்கு கிடைக்கும். இதர டெக்லைன் வேரியண்ட்டுகளின் விலை ரூ.30,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

அதேபோன்று, ஜிடிலைன் மாடலில் பெட்ரோல், டீசல் என அனைத்து வேரியண்ட்டுகளின் விலையும் ரூ.30,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.35,000 வரை அதிகரிக்கப்ப்டடுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

புதிய கியா செல்டோஸ் கார் வசீகரிக்கும் தோற்றத்தில் ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால், இந்த விலை உயர்வை வாடிக்கையாளர்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் என சிறப்பம்சங்களுக்கும் குறைவில்லை.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலி வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த யுவோ செயலி மூலமாக 37 வகையான தொழில்நுட்ப வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என பல்வேறு வசதிகள் உள்ளன.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

புதிய கியா செல்டெஸ் காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 360 டிகிரி கேமரா, பல்முனை பாதுகாப்புக்கான ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

புதிய கியா செல்டோஸ் கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

கியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!

இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Kia Motors has increased prices of Seltos SUV up to Rs. 35,000 in the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X