Just In
- 3 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 5 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 7 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கியா செல்டோஸ் எஸ்யூவி கார் எவ்வளவு பாதுகாப்பானது? குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் முடிவுகள்
கியா செல்டோஸ் எஸ்யூவி காரை, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. இதில் கிடைத்த முடிவுகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவுக்கான பாதுகாப்பான கார்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பல்வேறு கார்களை குளோபல் என்சிஏபி மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. இதில், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் காரும் ஒன்று. இது தற்போது அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாக உள்ளது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 3 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 2 நட்சத்திரங்களையும் கியா செல்டோஸ் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் சாத்தியமுள்ள 17 புள்ளிகளில், கியா செல்டோஸ் எஸ்யூவி கார் 8.03 புள்ளிகளை மட்டுமே பெற்றது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அதே சமயம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் அதிகபட்சம் பெறக்கூடிய 49 புள்ளிகளில், கியா செல்டோஸ் எஸ்யூவியால் 15 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்தான் குளோபல் என்சிஏபி-யால் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோதனை செய்யப்பட்ட வேரியண்ட் 2 ஏர் பேக்குகள் உடன் வருகிறது. இதுதவிர நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், முன் பகுதியில் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட் பெற்றுள்ளது.

அதே சமயம் கியா செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டாப் வேரியண்ட்டில் கூடுதலாக நான்கு ஏர் பேக்குகள் இடம்பெற்றுள்ளன. அதாவது மொத்தம் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் டாப் வேரியண்ட் பெற்றுள்ளது.

மேலும் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில்-அஸிஸ்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிளைண்ட்-வியூ மானிட்டர், ஹெட் அப் டிஸ்ப்ளே, முன் பகுதியிலும் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளும் கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் செல்டோஸ் எஸ்யூவி காரை மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்து வருகிறது. இதில், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் கியா செல்டோஸ் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யும் வல்லமை வாய்ந்தது.