சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு! அசத்தும் செல்டோஸ்!

உலகின் விலையுயர்ந்த மற்றும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதிகளைக் கொண்ட காராக விற்பனையாகும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கியா செல்டோஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து களமிறக்கிய முதல் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் எதிர்பாராத குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததால், இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்தியாவின் ஒட்டுமொத்த சாலையையுமே ஆளுகின்ற அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

இந்த வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நிறுவனம் தொடர்ச்சியாக அதன் புதுமுக கார்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், விரைவில் செல்டோஸ் மாடலில் குறைந்த விலை மின்சார காரைக் களமிறக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

இந்நிலையில், இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் செல்டோஸ் எஸ்யூவி மாடலை இளைஞர் ஒருவர், நாம் இதுவரை கண்டிராத வகையில் மாடிஃபை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அக்காரை உலகின் மிகவும் ஆடம்பரம் மற்றும் அழகான கார்களில் ஒன்றாக போற்றப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளையே மிஞ்சும் வகையில் மாடிஃபை செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. நாம் பார்க்கவிருக்கும் இதுபோன்ற அம்சங்கள் எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் மட்டுமே இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

அப்படி என்னங்க அதுல மாற்றம் செஞ்சிருக்காங்க? இதைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதுகுறித்த வீடியோவை பைக் மியூடர்ஸ் எனும் யுட்யூப் சேனல் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலமாகவே மாற்றம் செய்யப்பட்டிருக்கும் கியா செல்டோஸ் பற்றி வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

கியா செல்டோஸ் எஸ்யூவி காரில் மின்விளக்கு அலங்காரம் மட்டுமே முக்கிய மாற்றமாக செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அக்காரின் உருவத்தில் எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. அதேசமயம், காரின் உட்பகுதியை அலங்கரிப்பதற்காக இளைஞர்கள் செய்திருக்கும் வேலைகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தை உட்பகுதி மட்டுமின்றி வெளிப்புறத்திலும் அவர்கள் வழங்கியிருக்கின்றனர்.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

அதாவது, காரின் உட்பகுதிக்கு மட்டுமின்றி வெளிப்புறத்திற்கும் மின் விளக்கு அலங்காரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது வழக்கமாக செய்யப்படும் அலங்காரத்தைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட அலங்காரமாக இருக்கின்றது. அந்தவகையில், முதலில் காரின் வெளிப்புறத்தைப் பற்றி பார்த்துவிடலாம். கியா செல்டோஸ் காரின் சக்கரங்கள், பக்கவாட்டு பகுதி மற்றும் காரின் அடிப்பகுதி ஆகிய அனைத்திலும் வித்தியாசமான நிறம் கொண்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

இந்த மின் விளக்குகள் பிரேக் பிடிக்கும் மற்றும் தேவைப்படும் போது ஆன் செய்யும் வசதியில் உள்ளது. ஆகையால், அடர் இருட்டில் செல்லும்போது இக்கார் விண்வெளி பறக்கும் தட்டைப் போன்று காட்சியளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுமட்டுமின்றி, காரின் முகப்பு மின் விளக்கு பகுதியிலும் கூடுதல் வண்ண மின் விளக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

அவை, பறக்கும் தட்டின் மேலிருக்கும் சிக்னல் மின் விளக்குகள் போன்ற காட்சியை பார்வையாளர்களுக்கு வழங்குகின்றது. இவற்றைக்காட்டிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் காரின் உட்பகுதி உள்ளது. ஆம், காரின் உட்பகுதி மாற்றம்தான் ஹைலைட்டான விஷயமாக உள்ளது. காரின் உட்பகுதியில் ரூஃபில் நட்சத்திரங்களைப் போன்று மின்னும் மின் விளக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

அது, காரின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு நன்கு சாய்ந்து விட்டத்தைப் பார்க்கும்போது வான்வெளியைப் பார்ப்பது போன்ற பிம்பத்தை வழங்கும். இதுதான் இக்காரில் செய்யப்பட்ட மாற்றங்களிலேயே மிக முக்கியமான மாற்றமாக இருக்கின்றது. இந்த விநோதமான மாற்றத்தை இளைஞர்கள் செல்டோஸின் எச்டிஎக்ஸ் வேரியண்டில் செய்திருக்கின்றனர்.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

இந்த கார் ஏற்கனவே பல்வேறு சிறப்பம்சங்களைத் தன்னுள் அடக்கியிருக்கும் ஓர் மாடலாகதான் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், மின் அலங்காரத்தைப் பொருத்தவரை, புரஜெக்டர் ரகத்திலான முகப்பு மின் விளக்கு, தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

இதில், குறிப்பிட்ட சில அம்சங்களை நீக்கிய கார் மாடிஃபிகேஷன் குழுவினர், கூடுதலாக எச்ஐடி பனி விளக்கு, எல்இடி டிஆர்எல்கள், கார் கிரில்லின் உட்பகுதியில் இருந்து இன்டிகேட்டர் வரை எறியும் திசை திரும்பும் சமிக்ஞை மின் விளக்குகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி, காரின் உட்பகுதிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இரு நிறத்திற்கு கேபின் மாற்றப்பட்டிருக்கின்றது.

இத்துடன், ஸ்டியரிங் வீல், டேஷ் போர்டு, கதவு பேனல்கள் உள்ளிட்டவற்றின் நிறமும் மாற்றப்பட்டிருக்கின்றது. இதில், இருக்கையின் நிறமும் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், காரின் தரை விரிப்பான்களும் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க மாற்றத்தை இளைஞர்கள் கியா செல்டோஸ் காரில் வழங்கியிருக்கின்றனர். இதில் மின் விளக்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக பிரத்யேக ரிமோட்டினை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர்.

சாலையில் மிதக்கும் விண்வெளி கப்பலாக மாறிய கார்! ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு... அசத்தும் செல்டோஸ்!

இந்தியாவில் கியா செல்டோஸ் கார் எதிர்பாராத வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனால் நாட்டின் முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக அந்நிறுவனம் மாறியிருக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 9.89 லட்சம் முதல் ரூ.17.34 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Kia Seltos With Starlit Interiors. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X