கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகளின் அறிமுக விபரம்!

வாடிக்கையாளர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் கியா சொனெட் கார் முறைப்படி நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கியா சொனெட் காரின் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளின் விலை அறிவிப்பு எப்போது வெளியிடப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

கியா சொனெட் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களின் கீழ் 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுகளில் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் என்ற வேரியண்ட் மிகவும் விலை உயர்ந்ததாக வந்துள்ளது. ஆனால், இந்த வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலுமே மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

இதனிடையே, ஜிடிஎக்ஸ் ப்ளஸ் என்ற அதிகபட்ச வசதிகள் கொண்ட வேரியண்ட்டில் முழுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படவில்லை.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

இந்த நிலையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டும் விரைவில் வர இருக்கின்றன. இந்த மாத இறுதியில் இந்த இரண்டு டாப் வேரியண்ட்டுகளின் விலையை அறிவிக்க கியா திட்டமிட்டுள்ளதாக ஸிக் வீல்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

கியா சொனெட் கார் ரூ.6.71 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய டாப் வேரியண்ட்டுகளுக்கு ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

கியா சொனெட் எஸ்யூவியை போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் வந்துள்ளதை காண்பிப்பதற்காக, விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளின் விலை அறிவிப்பை வெளியிடுவதை கியா தவிர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. செல்டோஸ் எஸ்யூவிக்கும் இதே பாணியை கியா கடைபிடித்தது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவை. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் விலை அதிகம் என்றாலும், மதிப்புவாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

கியா சொனெட் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதி, போஸ் சவுண்ட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர், சன்ரூஃப் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

மேலும், 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்திற்கும் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பாதுகாப்பு அம்சங்களிலும் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.

கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகள் அறிமுக விபரம்!

ஒட்டுமொத்தத்தில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக மதிப்புவாய்ந்த தேர்வாக இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

Most Read Articles
English summary
According to report, Kia Sonet Automatic Top Variants Prices To Be Announced Very Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X