நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கியா சொனெட் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய இரு கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனையில் சக்கை போடு போடுகிறது. இந்த உற்சாகத்துடன் இந்தியாவில் தனது 3வது தயாரிப்பான சொனெட் காரை கியா இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கடும் போட்டி நிறைந்த இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் கியா சொனெட் கார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கியா சொனெட் எஸ்யூவி கார், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்போதே கியா சொனெட் குறித்த எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் மேலோங்கி விட்டது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

இதன்பின் கியா சொனெட் காரின் தயாரிப்பு நிலை மாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் சொனெட் காருக்கான முன்பதிவுகளையும் கியா ஏற்க தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே கியா சொனெட் காருக்கு, 6,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், விலை எவ்வளவு? என்பது தெரியாத சூழலிலும் வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு கியா சொனெட் காரை முன்பதிவு செய்ய தொடங்கினர். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், செப்டம்பர் 18ம் தேதி (இன்று) கியா சொனெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

இதன்படி கியா சொனெட் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் கியா சொனெட் எஸ்யூவி கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

அத்துடன் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் கியா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என கியா சொனெட் காரில் மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு ஐஎம்டி (iMT - intelligent Manual Transmission) அல்லது 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். அதே சமயம் கியா சொனெட் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டு விதமான ட்யூனிங் உடன் கிடைக்கும். இதில், 99 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடனும், 113 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடனும் கிடைக்கும்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கியா சொனெட் எஸ்யூவியின் கேபினில், 10.25 இன்ச் (26.03 செமீ) ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்புடன் ஏர் ப்யூரிஃபையர் மற்றும் சப்-வூஃபர் உடன் போஸ் 7 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகளையும் கியா சொனெட் எஸ்யூவி பெற்றுள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கியா சொனெட் காரின் முன் வரிசையில் வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 57 வசதிகளுடன் யுவோ கனெக்டிவிட்டி சூட் உள்ளிட்ட வசதிகளும் கியா சொனெட் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப ரீதியில் குறை சொல்ல முடியாத காராக கியா சொனெட் உள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

அதேபோல் பாதுகாப்பு வசதிகளிலும் கியா நிறுவனம் குறை வைக்கவில்லை. இதில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பிரேக் அஸிஸ்ட், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கியமானவை.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் கியா சொனெட் பெற்றுள்ளது. உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சொனெட் எஸ்யூவியின் விலைகளை கியா நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கியா நிறுவனம் சொனெட் காருக்கு மிக சவாலான விலையை நிர்ணயம் செய்து போட்டியாளர்களை திகிலடைய செய்துள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

இதன்படி கியா சொனெட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை (பேஸ் வேரியண்ட்) 6.71 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அனைத்து முக்கியமான போட்டியாளர்களை விடவும் குறைவான விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. கியா நிறுவனம் அறிமுக சலுகை விலையாக இதனை அறிவித்துள்ளது.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

அதே சமயம் கியா சொனெட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மிகவும் சவாலான விலையில் வந்துள்ளதால், கியா சொனெட் எஸ்யூவி கார் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி. இந்த காரின் விரிவான விலை விபரங்களை கீழே காணலாம்.

Smartstream G1.2 G1.0 T-GDI D1.5 CRDi WGT D1.5 CRDi VGT
HTE ₹6.71 Lakh (5MT) ₹8.05 Lakh (6MT)
HTK ₹7.59 Lakh (5MT) ₹8.99 Lakh (6MT)
HTK+ ₹8.45 Lakh (5MT) ₹9.49 Lakh (6iMT) / ₹10.49 Lakh (7DCT) ₹9.49 Lakh (6MT) ₹10.39 Lakh (6AT)
HTX ₹9.99 Lakh (6iMT) ₹9.99 Lakh (6MT)
HTX+ ₹11.65 Lakh (6iMT) ₹11.65 Lakh (6MT)
GTX+ ₹11.99 Lakh (6iMT) ₹11.99 Lakh (6MT)
நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கியா சொனெட் காரின் முக்கியமான போட்டியாளர்களையும், அந்த கார்களின் விலைகளையும் கீழே காணலாம்.

ஹூண்டாய் வெனியூ : 6.75 - 11.63 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

டாடா நெக்ஸான் : 6.99 - 12.7 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா : 7.34 - 11.4 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

மஹிந்திரா எக்ஸ்யூவி300 : 7.94 - 12.29 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் : 8.17 - 11.71 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை)

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கியா சொனெட் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது கியா சொனெட் காருக்கு தற்போது முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் கியா டீலர்ஷிப்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம்.

நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்...

கியா சொனெட்டின் வருகையால், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போகிறது. அதே சமயம் டொயோட்டா அர்பன் க்ரூஸர், ரெனால்ட் கிகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களும் விரைவில் இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

Most Read Articles
English summary
Kia Sonet Compact SUV Launched In India - Price, Features, Engine Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X