புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் வந்துள்ள புதிய கியா சொனெட் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இந்த நிலையில், இந்த காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கனக்கச்சிதமான தேர்வாக கியா சொனெட் வந்துள்ளது. டிசைன், தொழில்நுட்ப வசதிகள், எஞ்சின், கியர்பாக்ஸ், விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக இருப்பதால், புக்கிங் குவிந்து வருகிறது. மேலும், டெலிவிரிப் பணிகளும் இன்றே துவங்கி இருக்கின்றன.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

இதுவரை 25,000க்கும் அதிகமான முன்பதிவுகளை கியா சொனெட் எஸ்யூவி குவித்துள்ளது. இதனால், இந்த எஸ்யூவிக்கான காத்திருப்புக் காலமும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், போதுமான உற்பத்தி திறன் மற்றும் இருப்பு வைக்கப்பட்டே டெலிவிரி துவங்கப்படுவதால், தடங்கல்கள் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

இந்த நிலையில், கியா சொனெட் காருக்கான காத்திருப்புக் காலம் குறித்த தகவல் சமூக வலைத்தளம் மூலமாக கசிந்துள்ளது. இதில், மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளுக்கு 4 முதல் 5 வாரங்கள் காத்திருப்பு காலம் நிலவுகிறது. அதேநேரத்தில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலுக்கான காத்திருப்பு காலம் 4 முதல் 9 வாரங்கள் நீடிக்கிறது.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

எனினும், புக்கிங் மற்றும் தேவைக்கு தக்கவாறு உற்பத்தியை செம்மையாக்கும் திட்டங்களை கியா மோட்டார் கைவசம் வைத்துள்ளது. இதனால், அதிகபட்சமாக ஒன்றரை மாதங்களில் கியா சொனெட் எஸ்யூவியை டெலிவிரி பெற்றுவிடலாம் என்று தெரிகிறது.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு அதிக டிமான்ட் இருப்பதால், உற்பத்தியிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதனால், அந்த வேரியண்ட்டின் காத்திருப்பு காலம் குறைவாக இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களை இந்த வேரியண்ட்டை முன்பதிவு செய்வதற்கும் இது ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

கியா சொனெட் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த மாடலானது HTE, HTK, HTK Plus என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

அடுத்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது ஐஎம்டி எனப்படும் புதுமையான வகை கியர்பாக்ஸ் தேர்விலும், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும். இந்த 1.0 லிட்டர் ஐஎம்டி மாடலானது எச்டிகே ப்ளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் ப்ளஸ், ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டிசிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட் எச்டிகே ப்ளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

கியா சொனெட் காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வந்துள்ளது. இதில், குறைவான திறன் கொண்ட மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளது.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

டீசல் மேனுவல் மாடலானது எச்டிஇ, எச்டிகே, எச்டிகே ப்ளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் ப்ளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் மாடலானது எச்டிகே ப்ளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

 புக்கிங் கொட்டுகிறது... கியா சொனெட் காருக்கான வெயிட்டிங் பீரியட் நிலவரம்!

கியா சொனெட் காருக்கு ரூ.6.71 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது போட்டியாளர்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
As per reports, the waiting period for the GT-line variant is currently 4 - 5 weeks, while the Tech-Line models have a slightly higher waiting period of 8 - 9 weeks.
Story first published: Friday, September 18, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X