புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம

கியா மோட்டார்ஸ் நிறுவனம் வென்யூ உள்ளிட்ட பிரபலமான சப் 4-மீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் புதிய சொனேட் மாடலை அறிமுகப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் இந்த எஸ்யூவி காரின் உட்புற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

வெளியாகியுள்ள இந்த ஸ்பை புகைப்படங்களின் மூலம் கியா சொனேட் எஸ்யூவி 10.25 இன்ச்சில் தொடுத்திரையை பெற்றிருப்பது தெரிய வருகிறது. இந்த தொடுத்திரையை ஏற்கனவே இந்நிறுவனத்தின் முதல் இந்திய அறிமுக மாடலான செல்டோஸில் பார்த்திருப்போம்.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

இதேபோல் செல்டோஸ் மாடலில் உள்ள தாழ்வான ஸ்டேரிங் சக்கரத்தை தான் இந்த 2020 எஸ்யூவி மாடலும் கொண்டுள்ளது. ஆனால் அந்த எஸ்யூவியில் இல்லாத வகையில் பொத்தான்கள் மூலமாக செயல்படக்கூடிய பெரிய அளவிலான ஏசி வெண்ட்ஸ் உடன் ஃபங்கி டிசைனில் கேபினை புதிய சொனேட் எஸ்யூவி காரில் கியா நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

உட்புறத்தில் இருக்கைகள் சில்வர் நிறத்தில் சிவப்பு நிற தையல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த காரில் 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

இதனுடன் போஸ் ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி காரில் கியா நிறுவனம் பொருத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இவற்றை தவிர்த்து வயர்லெஸ் போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் காரை ஸ்டார்ட் செய்வதற்கான பொத்தான்களுடன் கீலெஸ் எண்ட்ரீ போன்ற தொழிற்நுட்பங்களையும் இந்த கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

கிட்டத்தட்ட ஹூண்டாய் வென்யூவின் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கியா நிறுவனத்தின் இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

ஏறக்குறைய 120 பிஎச்பி வரையிலான ஆற்றலை காருக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இந்த ட்ரான்ஸ்மிஷன் தேர்வு ஹூண்டாய் வென்யூ மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய கியா சொனேட் காரின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்...? வெளிவந்தது புதிய ஸ்பை புகைப்படம்

தற்சமயம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நிலவி வருவதால், கியா சொனேட்டின் ஆகஸ்ட் மாத அறிமுகம் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்ஷோரூமில் ரூ.7 லட்சத்தை விலையாக பெறவுள்ள இந்த எஸ்யூவி காருக்கு போட்டி மாடல்களாக ஹூண்டாய் வென்யூ உடன் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்டவை சந்தையில் உள்ளன.

Source: Autocar India Forum

Most Read Articles
English summary
Take A Look At The Kia Sonet's Cabin In This Leaked Image
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X