இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும் ஒரு சிறந்த எஞ்சின் - கியர்பாக்ஸ் தேர்வானது கியா சொனெட் காரில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையை பொறுத்து மிக விரைவில் இந்த எஞ்சின் - கியர்பாக்ஸ் தேர்வு சொனெட் எஸ்யூவியில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா சொனெட் எஸ்யூவி சூப்பர் ஹிட் மாடலாக மாறி இருக்கிறது. விலை அறிவிக்கப்படும் நாளன்று 25,000 புக்கிங்களுடன் மிக வலுவான நிலையில் சந்தையில் கால் பதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில், வடிவமைப்பு, வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் சிறந்த தேர்வாக முன்னிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

கியா சொனெட் எஸ்யூவியில் வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக மூன்று எஞ்சின்கள் மற்றும் நான்கு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்தான் கியா சொனெட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

இதன் குறைவான விலை மாடலாக வந்துள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. அடுத்து, அதிக வரவேற்பை பெற்றிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் ஐஎம்டி எனப்படும் க்ளட்ச் இல்லாத மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றன.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதேநேரத்தில், ஹூண்டாய் வெனியூ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

ஆனால், கியா சொனெட் காரில் இந்த காம்போ இல்லை. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்று தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இதே வகை கியர்பாக்ஸ்தான் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

இந்த நிலையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மாடல் குறித்து அதிக விசாரணைகள் வந்தால், அதனை உடனடியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தில் கியா மோட்டார் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

தற்போது கியா சொனெட் எஸ்யூவியின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட மாடலின் எச்டிகே ப்ளஸ் என்ற பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.9.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவே மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வாக இருந்தால் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை விலை குறைவாக இருக்கும்.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

எப்படி எனில், ஹூண்டாய் வெனியூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.8.50 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதே அளவுக்குத்தான் கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மாடலுக்கும் விலை நிர்ணயிக்கப்படும்.

இந்த எஞ்சின்- கியர்பாக்ஸுடன் கியா சொனெட் எஸ்யூவி வந்தால் சூப்பர் தேர்வு?

எனவே, கியா சொனெட் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வாங்க விரும்புவோருக்கு இந்த முழுமையான மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வானது ரூ.1 லட்சம் வரை குறைவான விலையில் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த எஞ்சின் - கியர்பாக்ஸ் தேர்வு விரைவில் கியா சொனெட் எஸ்யூவியில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
According to the report, Kia may launch Sonet SUV with 1.0 Ltr Turbo Petrol With Manual Gearbox Option combo in India soon.
Story first published: Tuesday, September 22, 2020, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X