புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட் எஸ்யூவி... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய கியா சொனெட் எஸ்யூவி கார் முன்பதிவு எண்ணிக்கையில் பட்டையை கிளப்பி வருகிறது. சராசரியாக 3 நிமிடங்களுக்கு 2 கார்கள் வீதம் புக்கிங் செய்யப்பட்டு வருவதால், போட்டியாளர்கள் மிரண்டு போய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்படும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிக வர்த்தகம் வளம் மிக்கதாக மாறி இருக்கும் இந்த மார்க்கெட்டில், எத்துனை மாடல்கள் வந்தாலும், வரவேற்பை பெற்று வருகின்றன. இதனால், இந்த ரகத்தில் புதிய மாடல்களுடன் கார் நிறுவனங்கள் வரிந்து கட்டி வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் கியா மோட்டார் நிறுவனம் தனது சொனெட் எஸ்யூவியை களமிறக்கியது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்த கார் புக்கிங் எண்ணிக்கையில் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், ஆகஸ்ட் 20ந் தேதி முதலே புக்கிங் துவங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது முன்பதிவு எண்ணிக்கையை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. சரியாக இரண்டு மாதங்களில் 50,000 முன்பதிவுகளை கடந்து போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது கியா சொனெட்.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

கியா மோட்டார் நிறுவனத்தின் தகவலின்படி, சராசரியாக 3 நிமிடங்களுக்கு 2 சொனெட் கார்கள் வீதம் புக்கிங் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 சொனெட் கார்கள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கியா மோட்டார் நிறுவனம் பெரும் உற்சாகத்தில் உள்ளது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

எனினும், புக்கிங் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால், கியா சொனெட் எஸ்யூவியின் காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் சில வேரியண்ட்டுகளுக்கு 3 முதல் 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

கியா சொனெட் எஸ்யூவியின் டிசைன், வசதிகள், தொழில்நுட்பங்கள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்து வாடிக்கையாளர்களுக்கு சரியான தேர்வாக மாறி இருக்கிறது. கியா சொனெட் கார் நவீன டிசைன் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்து விடுகிறது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய கியா சொனெட் காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

இரண்டாவது தேர்வாக வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ இணைக்கப்பட்டுள்ளது. இதே டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரை வழங்கும் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட்... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி வசதி, ஏர் பியூரிஃபயர், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், டிரைவிங் மோடுகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என தொழில்நுட்ப வசதிகள் பட்டியல் நீள்கிறது. ரூ.6.71 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
South Korean car maker, Kia Motor has received over 50,000 bookings for the Sonet in India.
Story first published: Wednesday, October 21, 2020, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X