சொனெட் எஸ்யூவிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் புக்கிங்... திக்குமுக்காடி நிற்கும் கியா!

கொரோனா பிரச்னை உள்ளிட்ட இக்கட்டான நிலையிலும் கூட, கியா சொனெட் எஸ்யூவிக்கு இமாலய புக்கிங் எண்ணிக்கையை பெற்று அசத்தி இருக்கிறது. இது கியா மோட்டார் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதுடன் போட்டியாளர்களையும் மலைக்க வைத்துள்ளது.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று புதிய கியா சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.6.71 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்துள்ள கியா சொனெட் எஸ்யூவி சப்- காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் மாடலாக மாறும் என்பது புக்கிங் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

கொரோனா பிரச்னை, வாகன விற்பனை மந்தம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட மிக இக்கட்டான இந்த தருணத்தில், 25,000 முன்பதிவுகளை கியா சொனெட் பெற்றிருக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1,000 முன்பதிவுகளை கியா சொனெட் பெற்று வருகிறது.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

கியா சொனெட் எஸ்யூவி டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களின் கீழ் பல்வேறு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில்,ஜிடிஎக்ஸ் ப்ளஸ் டாப் வேரியண்ட்டிற்குத்தான் முன்பதிவு அதிகம் இருப்பதாக கியா தெரிவித்துள்ளது. இது கியா நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

கியா சொனெட் எஸ்யூவிக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன. போட்டியாளர்களைவிட அதிக மதிப்பை தரும் ஏராளமான விஷயங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. டிசைன், தொழில்நுட்ப வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தரும்.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

குறிப்பாக, டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. புலிமூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி விளக்குகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

இதன் முக்கிய அம்சமாக, 10.25 அங்குல பெரிய தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் யுவோ கனெக்டெட் கார் செயலி மூலமாக 57 விதமான கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கத் தகவல்களை பெறும் வாய்ப்புள்ளது. இந்த காரில் 7 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

இந்த காரில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. விலை குறைவான தேர்வாக வந்துள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என மூன்று தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்விலும், டீசல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

யாரும் எதிர்பாராத வகையில், விலை அறிவிப்புக்கு முன்னதாகவே கியா சொனெட் எஸ்யூவி இமாலய புக்கிங் எண்ணிக்கையை பெற்றிருக்கிறது. இது போட்டியாளர்களை கலங்கடித்துள்ளது. இந்தியாவிலிருந்து 70 நாடுகளுக்கு புதிய கியா சொனெட் எஸ்யூவி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. முதல் ஆண்டு மட்டும் 1 லட்சம் யூனிட்டுகளை இந்தியாவிலும், 50,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்யவும் கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவிக்கு புக்கிங் குவிகிறது... மலைத்து நிற்கும் போட்டியாளர்கள்!

கியா சொனெட் காருக்கு ரூ.6.71 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ளதால், வரும் நாட்களில் புக்கிங் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுமுதல் டெலிவிரியும் துவங்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Kia Motor has received more than 25,000 bookings for Sonet SUV in India even before launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X