மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்! இந்த கார் எப்படி இருக்கு? விமர்சனம்

மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களை ஓரங்கட்டும் வகையில் கியா சொனெட் கார் உள்ளது. இந்த காரின் முதல் பார்வை விமர்சனைத்தைதான் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

ஒரே ஒரு தயாரிப்பின் மூலம் இந்தியாவின் மாபெரும் நிறுவனமாக உருவாகியுள்ளது தென் கொரிய நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ். இந்நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்த ஒரு ஆண்டுகளுக்கு உள்ளாகவே 1 லட்சம் யூனிட் கார்களை விற்பனைச் செய்து புதிய சாம்ராஜ்யத்தைப் படைத்துள்ளது. இந்நிறுவனம் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்யூவி ரக காரினாலயே இந்த இடத்தைக் கியா பெற்றிருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இதுவே, இந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய முதல் காராகும். இதன் மூலமே இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனமும் எட்டிராத புதிய மைல் கல்லை கியா பெற்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் தனக்கு கிடைத்திருக்கும் அதீத வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் அந்நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

அந்தவகையில், கார்னிவல் சொகுசு எம்பிவி ரக காரை அந்த நிறுவனம் களமிறக்கியது. இதைத்தொடர்ந்து மீண்டும் புதிய தயாரிப்புகளைக் களமிறக்குவதற்கான பணியில் ஆயத்தமாகியுள்ளது. அந்தவகையில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் புதிதாக சொனெட் எனும் மாடலை கியா நிறுவனம் உலகளாவிய வெளியீட்டை இன்று செய்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

கியா செல்டோஸ் காரை அடுத்து உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இரண்டாம் மாடலாக இது இருக்கின்றது. இந்த காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில்தான் கியா நிறுவனம் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்தே இன்று (ஆகஸ்டு 07) விற்பனைக்கான அறிமுகத்தையும் இந்தியாவில் அந்நிறுவனம் செய்திருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த கியா சொனெட் வெளியீடு செய்யப்பட்டிருப்பது அதன் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இக்கார் எந்த மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டிருக்கின்றது என்பதை உங்களுக்கு தெளிவாக கூறுவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

புதிய கியா சொனெட் காரின் சிறப்பு கண்ணோட்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பிரத்யேக படங்கள், வீடியோ மற்றும் சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

டிசைன் மற்றும் ஸ்டைல் எப்படி இருக்கு?

கவர்ச்சியான தோற்றத்தை விரும்பும் வாடிக்யைாளர்களைக் குறி வைத்து இக்கார் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் தோற்றத்தில் பெரியளவில் குறையை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது இளைஞர்களைக் கவரக் கூடிய வகையில் மிகவும் ஷார்ப்பான மற்றும் ஸ்டைலான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சொனெட்டின் தோற்றம் போல்டாகவும், ஒற்றைப் பார்வையிலேயே பிறரை கவரக்கூடியதாக இருக்கின்றது என கியா நிறுவனமும் அதன் பங்காக அக்காருக்கு பெருமை சேர்த்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

காரின் முன்பக்க தோற்றத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். கியா சொனெட் காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாக அதன் முன் பக்கம் உள்ளது. இந்த காரின் முன் பக்கத்தில் 'புலி மூக்கு' வடிவிலான கிரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் இரு முனைகளில்தான் காருக்கான முகப்பு மின் விளக்கு மற்றும் இன்டிகேட்டர்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

கிரில்லின் இந்த தனித்துவமான அமைப்பு சொனெட்டிற்கு பிரிமியம் தோற்றத்தை வழங்குகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் காருக்கு பொருத்தப்பட்ட மகுடமாகவே இந்த கிரில் அமைப்பு காட்சியளிக்கின்றது. இதை அலங்கரிக்கும் வகையில், ஹார்ட் பீட்டைக் குறிக்கும் வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் முகப்பு மின் விளக்குடன் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இந்த அமைப்பிற்கு கீழேதான் பனி விளக்குகள் பம்பரில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. இங்கு பனி விளக்குகள் மட்டுமின்றி 'டர்போ' வடிவிலான ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது சொனெட்டிற்கு லேசான ஸ்போர்ட்ஸ் கார் லுக்கை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

பக்கவாட்டு பகுதி... சொனெட்டின் பக்கவாட்டு பகுதியை பற்றி பார்த்தோமேயானால், கலப்படம் இல்லாத மிகவும் தூய்மையான பகுதியைப் போன்று காட்சியளிக்கின்றது. அதாவது, பெரியளவில் ஆடம்பரமில்லாத லேசான கட்டுமஸ்தான உடல்வாகை மட்டுமே அது பெற்றிருக்கின்றது. 16 இன்ச் கொண்ட இரு நிற அலாய் வீல்களும் காரின் அதே பக்கவாட்டு பகுதியில் அதன் தரிசனத்தை வழங்குகின்றது. இது, ஓர் ஸ்குவாரிஸ் ரக ஆர்ச்சுகளைக் கொண்ட வீலாகும்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இந்த காரின் வீல் மட்டுமில்லைங்க இதன் உடல் நிறமும் இரு நிற தேர்வில்தான் உள்ளன. இதன்படி மேற்கூரைக்கும் ஓர் நிறமும், உடல் பகுதிக்கு ஓர் நிறமும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூரையின் நிறத்தையே முன்பக்க பிள்ளர்களும் பெறுகின்றன. ஆனால், பின்பக்க பிள்ளர்களின் நிறம் உடல் நிறத்திற்கு ஏற்றவாறு வழங்கப்பட்டுள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

காரின் பின் பக்கம், சொனெட் எஸ்யூவியின் முன்பக்கத்தில் எப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றதே அதேபோன்று பின் பக்கத்திலும் குறிப்பிட்ட சிறப்பு அலங்காரங்கலை கியா வழங்கியுள்ளது. அதில், முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாக பின் பக்க எல்இடி மின் விளக்கு உள்ளது. இதுவும் முகப்பு மின் விளக்கைப் போலவே 'ஹார்ட் பீட்' வடிவத்தைக் குறிக்கும் ஸ்டைலைப் பெற்றிருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

மேலும், இதன் பூட் லிட் எனப்படும் பின் பக்க கதவு, பக்கவாட்டு பகுதியைப் போலவே எந்தவொரு பெரியளவு அலங்காரமும் இன்றி காணப்படுகின்றது. கியா நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை (சிக்னேட்சர்) தவிர வேறெதுவும் அதில் இடம்பெறவில்லை. இதன்படி, காரின் எஞ்ஜினைக் குறிக்கின்ற 'ஜிடி-லைன்' மற்றும் சொனெட் எனும் ஸ்டிக்கர்கள் மட்டுமே அங்கு இடம்பெற செய்யப்பட்டுள்ளன.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

ஓட்டுநர் அமரும் பகுதி மற்றும் காரின் உட்பகுதி

சொனெட்டின் வெளிப்புறத் தோற்றம் எப்படி நவீன காலத்திற்கு ஏற்றவாறு இருக்கின்றதோ அதேபோல் அதன் உட்பகுதியும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துமளவிற்கு பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இதன் உட்பகுதியில் அளவுகடந்த பிரீமியங்கள் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, கியா நிறுவனம் இந்த காரில் மிகப் பெரிய அளவு லோடில் சிறப்பு வசதிகளை வாரி வழங்கியுள்ளது என்றே கூறலாம்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

சொனெட்டின் ஸ்டியரிங் வீல் மூன்று ஸ்போக்குகளைக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஸ்டைலான மற்றும் அதிக கிரிப் வழங்கக்கூடிய லெதர் போர்வை போர்த்தப்பட்டிருக்கின்றது. பிற கார்களில் இருப்பதைப் போல இந்த ஸ்டியரிங் வீலிலும் ஏக்கச்சக்க கன்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஆடியோ கன்ட்ரோல் முதல் பல்வேறு சிறப்பம்சங்களின் கன்ட்ரோல்களும் ஸ்டியரிங் வீலில் இடம்பெற்றிருக்கின்றன.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இந்த ஸ்டியரிங் வீலிற்கு பின்னால்தான் காரின் மிக முக்கியமான அம்சம் ஒன்று ஒளிந்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர். 4.2 இன்ச் அளவுள்ள இது ஓர் டிஜிட்டல் டிஸ்பிளே ஆகும். அனலாக் டேக்கோ மீட்டர் மற்றும் ப்யூவல் அளவுகுறித்த தகவலை இது நமக்கு வழங்கும். இதன் மையப் பகுதியில் கூடுதலாக சிறிய திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இது, இன்டிகேட்டர், டிபிஎம்எஸ் மற்றும் பிற தகவல்களை வழங்கும்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இதேபோன்று நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். 10.25 இன்ச் கொண்ட இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது கூடுதல் சிறப்பான தகவல். இதில் யுவிஓ எனும் கன்னெக்டட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேவிகேஷன் போன்ற எண்ணற்ற வசதிகளை நம்மால் பெற முடியும்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இந்த தொடு திரைக்கு கீழேதான் காரின் ஏசி வெண்டுகள் இருக்கின்றன. இது செங்குத்தான அமைப்பைக் காணப்படுகின்றது. இதற்கு மிக அருகிலேயே மேனுவலாக கன்ட்ரோல் செய்யக்கூடிய கிளைமேட் கன்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, செல்போனை ஒயர் இணைப்பில்லாமல் சார்ஜ் செய்யும் பேட் நிறுவப்பட்டிருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இதுபோன்ற பிரிமியம் அம்சங்கள் மட்டுமின்றி பிரிமியம் லுக்கிற்கான வேலைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கியர் லிவரின் மத்திய கன்சோல் பகுதி முழுவதுக்கும் சில்வர் அக்சென்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கியர் லிவருக்கு மட்டுமின்றி ஏசி வெண்டைச் சுற்றி இதே மாதிரி சில்வர் அக்சென்டுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

பிரிமியம் அம்சம் மற்றும் தோற்றம் இருக்கட்டும் காரின் இட வசதி?... கியா சொனெட் காரில் இட வசதி மிகவும் தாராளமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக இடவசதியை மனத்தில் கொண்டு கேபின் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், நான்கு பேர் வரை செல்லும்போது மட்டுமே இந்த வசதியை பயணிகளால் உணர முடியும். ஏனெனில், அதிகபட்சமாக நான்கு பேர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

ஆகையால், கூடுதல் நபர்கள் இக்காரில் பயணிப்பார்களானால் அவர்கள் சற்று அசௌகரியமான பயண அனுபவத்தையேப் பெறுவார்கள். அதேசமயம், நான்கு பேர் மட்டும் பயணித்தால் சொகுசு கார்களுக்கான லக்சூரி அனுபவத்தை கியா சொனெட்டில் பெற முடியும். இதற்கேற்ப மிகவும் மிருதுவான இருக்கைகளே இக்காரில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவை, காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இந்த இருக்கைக்கு உயர் தரம் லெதர் போர்வை போர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று இதன் பின்னிருக்கைக்கு கூடுதல் வசதி வழங்கும் விதமாக கைகளுக்கு ஓய்வளிக்கக்கூடிய ஹார்ம் ரெஸ்ட் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி ஏராளமான வசதிகள் கியா சொனெட்டில் இடம்பெற்றிருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

அவற்றை பட்டியலாக கீழே காணலாம்.

சுற்றிலும் மின் விளக்கு

எலெக்ட்ரிக் சன் ரூஃப்

எல்இடி மூட் லைட்டிங்

சப் ஊஃபருடன் கூடிய போஸ் 7 ஸ்பீக்கர் மியூச் சிஸ்டம்

ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர்

மல்டி டிரைவ் மோட்கள்

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

மேற்கூறியவை கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரில் கூடுதல் சிறப்பு அம்சங்களாகக் காட்சியளிக்கின்றன. மேலே பார்த்ததைக் காட்டிலும் அதிக வசதிகள் உயர் ரக வேரியண்டான ஜிடி வரிசையில் கிடைக்க இருக்கின்றது. அவை, ஆரம்ப நிலையை மாடலைக் காட்டிலும் கூடுதல் பிரம்மிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

பாதுகாப்பு அம்சங்கள்

கியா சொனெட் காரில் அதிக சொகுசு வசதிகளைப் போலவே பாதுகாப்பு அம்சங்கள் எக்கசக்கமாக வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. அவை வேரியண்ட் வாரியாக மாறுபடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், பொதுவாக காணப்படும் பாதுகாப்பு அம்சங்களைப் பட்டியலாக கீழே காணலாம்.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

1. ஆறு ஏர் பேக்குகள்

2. டிராக்சன் கன்ட்ரோல்

3. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ்

4. டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம்

5. பிரேக் அசிஸ்ட், இஎஸ்சி, எச்ஏசி மற்றும் விஎஸ்எம்

6. புரஜெக்டர் பனி மின் விளக்கு

7. சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

எஞ்ஜின் மற்றும் கியர்

கியா சொனெட் எஸ்யூவி கார் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அதாவது, ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரைப் போல் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் இக்கார் கிடைக்க இருக்கின்றது. இந்த எஞ்ஜின்கள் அனைத்தும் பிஎஸ்6 தரத்திலானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்ட கியா சொனெட் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்விலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வைக் கொண்ட கியா சொனெட் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். இவ்விரு எஞ்ஜின்களைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் அல்லது புத்தம் புதிய 6-ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மாடல் கிடைக்க இருக்கின்றது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட்... இந்த கார் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

போட்டியாளர்கள்

கியா சொனெட் இந்தியாவில் பல நிறுவனத்தின் முக்கிய மாடல்களுக்கு போட்டியாக அமர இருக்கின்றது. இந்தியாவில் சப்-4 மீட்டர் ரக காருக்கு எக்கசக்க டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த டிமாண்டை பூர்த்தி செய்யும் விதமாக மாருதி சுசுகி விட்டார பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

மேற்கூறிய அனைத்து மாடல்களுக்குமே கியா சொனெட் கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து விரைவில் இந்தியர்களின் கைகளில் இக்கார் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி வருகையால் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள்கூட ஓரங்கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுமுக காரான சொனெட் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #கியா #kia motors #kia sonet
English summary
Kia Sonet Review (First Look): Design, Interiors, Specs, Features & Other Details Explained. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X