கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு மாடலாக சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் நாளை சுதந்திர தினத்தில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் தற்போது இந்த புதிய காரை பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலாக இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினை எதிர்காணவுள்ள இந்த கியா காரை பற்றி தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக வெளியாகியுள்ள தகவல்களில் காரின் பரிணாம அளவுகளும் தெரியவந்துள்ளன.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

அதன்படி பார்க்கும்போது இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் 3,995மிமீ நீளமும், 1790மிமீ அகலமும், 1,647மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். காரின் வீல்பேஸ் 2,500மிமீ-ம், க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 211மிமீ ஆக உள்ளது. சொனெட்டின் ஒட்டுமொத்த பூட்ஸ்பேஸின் அளவு 392 லிட்டர் ஆகும். எரிபொருள் டேங்கின் கொள்ளளவு 45 லிட்டர்.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

கியா சொனெட் மாடல் 2 பெட்ரோல் மற்றும் 2 டீசல் என மொத்தம் 4 என்ஜின் தேர்வுகளில் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் விலை குறைவான 1.2 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் தேர்வு சொனெட்டின் எச்டிஇ, எச்டிகே மற்றும் எச்டிகே+ என்ற ட்ரிம்களுக்கு கொடுக்கப்படும். அதுவே மற்றொரு ஆற்றல்மிக்க 1 லிட்டர் டர்போசார்டு பெட்ரோல் என்ஜின் 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 6-ஸ்பீடு ஐஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன் இந்த எஸ்யூவி காரின் எச்டிகே+, எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ்+ மற்றும் ஜிடிஎக்ஸ்+ உள்ளிட்ட ட்ரிம்களுக்கும், 7-ஸ்பீடு டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன் எச்டிகே+ மற்றும் ஜிடிஎக்ஸ்+ என்ற இரு ட்ரிம்களுக்கும் கொடுக்கப்படவுள்ளது.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

டீசல் வேரியண்ட்களை பொறுத்துவரையில் ஒரு 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தான் இரு விதமான ட்யூன்களில் வழங்கப்படவுள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் நிலையில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே+, எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ்+ மற்றும் ஜிடிஎக்ஸ்+ உள்ளிட்ட ட்ரிம்களுக்கு இந்த டீசல் என்ஜின் கொடுக்கப்படவுள்ளது.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

சற்று அதிகமாக 115 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் நிலையில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் எச்டிகே+ மற்றும் ஜிடிஎக்ஸ்+ என்ற ட்ரிம்களுக்கு இந்த டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளது.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

நிறத்தேர்வுகளை பொறுத்தவரையில் பழுப்பு தங்கம், இண்டலிஜன்சி ப்ளூ, அவ்ரோரா ப்ளாக் பேர்ல், க்ளாசியர் வெள்ளை பேர்ல், கிராவிட்டி க்ரே, இண்டென்ஸ் ரெட், ஸ்டீல் சில்வர் மற்றும் க்ளியர் வொய்ட் உள்ளிட்ட நிறங்கள் வழங்கப்படவுள்ளன. ட்யூல் டோன் தேர்வில் வெள்ளை, கோல்ட் மற்றும் சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் அடங்குகின்றன.

கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் கியா சொனெட் விற்பனைக்கு கிடைக்காது... முக்கிய விபரங்கள் கசிந்தன...

சாலையில் சமீபத்தில் அடையாளப்படுத்தப்பட்ட போது கார் கொண்டிருந்த ஆரஞ்ச் நிறத்தில் கார் விற்பனை செய்யப்பட போவதில்லை. ஹூண்டாய் வென்யூவில் இருந்து பெரும்பான்மையான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ள சொனெட் எஸ்யூவி மாடலுக்கு போட்டியினை அளிக்க விரைவில் ரெனால்ட் கிகர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்டவையும் இணையவுள்ளன.

Most Read Articles
English summary
Kia Sonet Dimensions, Variants, Engine Specs Leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X