விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி... நம்பர்-1 இடத்தை தக்கவைத்து அசத்தல்!

அண்மையில் வந்து வாடிக்கையாளர்களை வசியம் செய்த புதிய கியா சொனெட் எஸ்யூவி சப்-காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் விற்பனையில் நம்பர்-1 மாடலாக மாறி இருக்கிறது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

கடந்த செப்டம்பர் 18ந் தேதி கியா சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலை என அனைத்திலும் சரியான மாடலாக வந்ததால், அறிமுகம் செய்யப்பட்ட உடனே இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

இந்த நிலையில், மாதத்திற்கு மாதம் கியா சொனெட் எஸ்யூவியின் விற்பனை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் சப்-காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை கியா சொனெட் எஸ்யூவி பிடித்துள்ளது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

கடந்த மாதத்தில் 11,417 கியா சொனெட் எஸ்யூவிகள் விற்பனையாகி அசர வைத்துள்ளது. மேலும், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக இருந்து வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விற்பனையில் வீழ்த்தி உள்ளது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

கடந்த மாதம் கியா சொனெட் எஸ்யூவி கொடுத்த விற்பனை எண்ணிக்கையால் கியா மோட்டார் நிறுவனம் பெரும் உற்சாகத்தில் உள்ளது. வரும் மாதங்களிலும் கியா சொனெட் எஸ்யூவியின் விற்பனைக்கு அதிக புக்கிங் இருப்பதால், விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

கியா சொனெட் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் விற்பனை குறித்து கியா மோட்டார் தலைமை செயல் அதிகாரி கூக்ஷியூன் ஷிம் கூறுகையில்,"கொரோனா பிரச்னைக்கு இடையிலும், எங்களது சொனெட் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பை இந்தியர்கள் வழங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பண்டிகை கால விற்பனையும் சிறப்பாக அமைந்தது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

பெரு நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களிலும் கியா சொனெட்டிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

அதேநேரத்தில், கொரோனாவால் தொடர்ந்து நிச்சமயமற்ற நிலை சந்தையில் தொடர்ந்து நீடிக்கிறது. அதற்கு ஏற்ற அனைத்து உபாயங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் புதிய கியா சொனெட் எஸ்யூவி!

இதனிடையே, கடந்த மாதம் கியா செல்டோஸ் எஸ்யூவியும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் 9,205 செல்டோஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கியா மோட்டார் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரைவிட 50 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

Most Read Articles

English summary
Kia Motors also announced that their Sonet is now the best-selling compact-SUV in the segment, after having registered 11,417 units last month. The Kia Sonet now reclaims the ‘Best-selling compact-SUV' title from its rival, the Maruti Suzuki Vitara Brezza.
Story first published: Tuesday, December 1, 2020, 18:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X