உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு கியா சொனெட் கார் பிரத்யேகமான ஆரஞ்ச் நிறத்தில் இந்திய சாலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் நேற்று (ஆகஸ்ட் 7) உலகளவில் அறிமுகமானது. இதனை தொடர்ந்து இந்தியாவில் இந்த கார் வருகிற சுதந்திர தினத்தின்போது வெளியிடப்படவுள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

முன்னதாக சொனெட் காரை பல முறை கியா நிறுவனம் இந்தியாவில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வந்தது. அவற்றை நம் தளத்தில் பதிவிட்டிருந்தோம். இந்த நிலையில் உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக சொனெட் கார் ஒன்று இந்திய சாலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

கவர்ச்சிக்கரமான ஆரஞ்ச் நிறத்தில் ஜொலிக்கும் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் நிறுவனத்தின் எஸ்யூவி மாடலான செல்டோஸிற்கு இணையான வசதிகளை கியா வழங்கியிருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அட்டகாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சொனெட் மாடல் முன்னதாக 2020 ஆட்டோ நிகழ்ச்சியில் இந்தியர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

அதற்கு அடுத்து தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையிலான தோற்றத்தில் ப்ராண்ட்டின் இணையத்தள பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் இந்த எஸ்யூவி மாடல் என்ஜின் உள்பட பெரும்பான்மையான பாகங்களை ஹூண்டாய் வென்யூவில் இருந்து பெற்றுள்ளது. இதன்படி இந்த காருக்கு மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் உள்ளிட்டவை இந்த என்ஜின் தேர்வுகளில் அடங்கும். இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. செல்டோஸை போல் சொனெட் மாடலும் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரு ட்ரிம்களின் விற்பனை செய்யப்படவுள்ளது. ட்ரிம்-ஐ பொருத்து என்ஜின் தேர்வுகள் வேறுபடும்.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

காரின் வெளிப்புறத்தில் முக்கிய அம்சமாக 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடன் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி தரத்தில் பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் எல்இடி ப்ரோஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்களை பெற்றுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் ஸ்கிட் ப்ளேட்கள், வலிமையான வீல் ஆர்ச்களும் நம் கண்ணில் படுகின்றன.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

உட்புறத்தில் யுவோ கனெக்டட் கார் செயலியுடன் 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4.25 இன்ச் திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், காற்று சுத்திகரிப்பான், மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்விட்ச் கண்ட்ரோல்களுடன் ஸ்டீயரிங் சக்கரம் உள்பட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்

ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையினை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் கியாவின் சொனெட் மாடலுக்கு விற்பனையில் போட்டியினை அளிக்க மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளிட்டவை தயாராக உள்ளன.

Most Read Articles
English summary
Exclusive Kia Sonet Spied For The First Time After Global Unveil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X