கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக தொடர் சோதனை ஓட்டங்களில் இந்த கார் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

அதன் ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த வகையில் தற்போது ஆட்டோகார் இந்தியா செய்தி தளத்தால் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில் கியா சொனெட் கார் ஆனது க்ரே நிற பெயிண்ட் அமைப்பில் ஜொலிக்கிறது. இது இதன் மிட்-வேரியண்ட்டான டெக்லைன் மாடலாக இருக்கலாம்.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

ஏனெனில் இந்த கார் ஜிடி லைன் வேரியண்ட்டில் உள்ளதை போன்ற சிவப்பு நிற ஹைலைட்களை கொண்டிருக்கவில்லை. மேலும் டாப் ட்ரிம் மாடல்களில் காணப்பட்ட முழு-எல்இடி யூனிட்டிற்கு பதிலாக வித்தியாசமான ஹெட்லைட் செட்அப்-ஐ பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

அதேபோல் முன்பக்க க்ரில் உடன் ஃபாக் விளக்கு வேறுப்பட்ட ஃபினிஷிங்கில் இணைக்கப்பட்டிருக்கும் போன்ற தோற்ற மாறுப்பாடுகளையும் ஏற்றிருக்கலாம். இதன் க்ரே பெயிண்ட் அமைப்பு ட்யூல்-டோன் நிறத்தில் கொடுக்கப்படலாம். ஏனெனில் காரின் ஒஆர்விஎம்-கள் உள்ளிட்டவை வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

மேலும் இத்தகைய ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பு மிட்-வேரியண்ட்களுக்கு மட்டும் வழங்கப்படலாம். இவற்றுடன் எல்இடி அல்லாத டெயில்லேம்ப்கள், வைப்பர் & வாஷர் அல்லாத விண்ட்ஸ்க்ரீன் போன்ற வித்தியாசங்களையும் முன்பு வெளியாகியிருந்த ஸ்பை படங்களில் இருந்து அறிய முடிகிறது.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

டெயில்லேம்ப்கள் எல்இடி தரத்தில் இல்லாவிட்டாலும், மற்ற வேரியண்ட்களைபோல் இரு டெயில்லைட்களையும் ஒளி பிரதிப்பலிக்கும் பார் இணைக்கிறது. மற்றப்படி கியா நிறுவனம் சொனெட் மாடலின் இத்தகைய மிட் வேரியண்ட்களில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் முன்பக்கமாக பார்க்கிங் செய்வதற்கான சென்சார் போன்ற வசதிகளில் எந்த குறையையும் வைக்காது.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

இவை மட்டுமின்றி உலகின் முதல் வைரஸை கண்டறியும் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பானையும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடல் பெற்றுள்ளது. தயாரிப்பு நிறுவனம் இந்த எஸ்யூவி காரை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகளுடன் சந்தைக்கு கொண்டுவருகிறது.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

இதில் பெட்ரொல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினிற்கு 6-ஸ்பீடு மேனுவல், டார்க் கன்வெர்டர் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளும், டர்போ-பெட்ரோல் என்ஜினிற்கு 6-ஸ்பீடு ஐஎம்டி, 7-ஸ்பீடு டிசிடி என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

கியா சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட் இவ்வாறு தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான ஸ்பை படங்கள்

இதன் மூலம் கியா நிறுவனம் எத்தகைய தொழிற்நுட்ப தொகுப்புகளுடன் சொனெட் மாடலை உருவாக்கியுள்ளது என்பதை அறியலாம். அறிமுகத்திற்கு பிறகு இந்த எஸ்யூவி காருக்கு ஹூண்டாய் வென்யூ மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள நிஸான் மேக்னைட் உள்ளிட்டவை முக்கிய போட்டி மாடல்களாக விளங்கும்.

Most Read Articles
English summary
Kia Sonet mid-spec spied before launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X