கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்கள் இணையதளம் மூலமாக கசிந்துள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் சொனெட் என்ற பெயரில் மாதிரி வடிவமாக இந்த எஸ்யூவி பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. செல்டோஸ் எஸ்யூவி மூலமாக இந்தியர்களை கியா மோட்டார் சுண்டி இழுத்துவிட்டது. எனவே, அந்த நிறுவனத்திடம் இருந்து வரும் விலை குறைவான எஸ்யூவி என்பதால், பெரிய ஆவல் இருந்து வருகிறது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

இந்த நிலையில், வரும் 7ந் தேதி புதிய கியா சொனெட் எஸ்யூவி உலக அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் இந்த புதிய காம்பேக்ட எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

இந்த நிலையில், கியா சொனெட் எஸ்யூவி எத்தனை வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது என்பது குறித்த சில முக்கியத் தகவல்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக கசிந்துள்ளன.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

செல்டோஸ் எஸ்யூவியை போன்றே சொனெட் எஸ்யூவியும் எஞ்சின் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. டெக் லைன் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

இந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளானது HTE, HTK, HTX மற்றும் HTX+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஜிடி லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் தேர்வானது GTK, GTX மற்றும் GTX+ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

டெக் லைன் வேரியண்ட்டுகளில் சாதாரண ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, கருப்பு - பீஜ் வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஜிடி லைன் வேரியண்ட்டில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று, சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகளுடன் ஜிடி லைன் வேரியண்ட்டுகள் சற்று பிரிமீயமாக இருக்கும்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

இந்த எஸ்யூவியில் பொதுவான அம்சங்களாக கவர்ச்சிரமான 16 அங்குல அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகளும் இந்த காரில் வழங்கப்படும்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

புதிய கியா சொனெட் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

அடுத்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் விபரம் கசிந்தது

புதிய கியா சொனெட் எஸ்யூவி ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
கியா சொனெட், கியா கார், கியா சொனெட் வேரியண்ட் விபரம், கியா சொனெட் எஞ்சின்
Story first published: Wednesday, August 5, 2020, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X