கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங

பண்டிகை காலத்தில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக வந்துள்ளது கியா சொனெட் கார். டிசைன், எஞ்சின், விலை அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக வந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து புக்கிங் செய்து வருகின்றனர்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

வாடிக்கையாளர்களுக்கு தோதுவான பட்ஜெட்டில் இந்த காரை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில், வசதிகள், எஞ்சின்கள் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களின் கீழ் HTE, HTK, HTK Plus, HTX, HTX Plus, GTX Plus ஆகிய பல வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகள், பட்ஜெட் ஆகிய விபரங்களையும், இதில் எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதற்கான வாய்ப்பையும் பெற தொடர்ந்து படியுங்கள்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

கியா சொனெட் எச்டிஇ வேரியண்ட்

இந்த வேரியண்ட்டானது 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும், 1.5 லிட்டர் டீசல் மேனுவல் மாடலில் கிடைக்கும். ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட், ஹார்ட்பீட் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், 15 அங்குல ஸ்டீல் வீல்கள், கருப்பு வண்ண ஃபேப்ரிக் இன்டீரியர், முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ் வசதி, யுஎஸ்பி சார்ஜர்கள், ரியர் ஏசி வென்ட்டுகள், 1.5 அங்குல மோனோ டோன் மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

இந்த பேஸ் வேரியண்ட்டில் டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஸ்டீயரிங் வீல், இரண்டு ஏர்பேக்குகள், முன்புற சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த வேரியண்ட்டின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு ரூ.6.71 லட்சமும், டீசல் மாடலுக்கு ரூ.8.05 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

02. கியா சொனெட் எச்டிகே வேரியண்ட்

இந்த வேரியண்ட்டானது 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் மாடல்களில் கிடைக்கும். கூடுதலாக 16 அங்குல சக்கரங்கள், ஓட்டுனர் இருக்கைக்கான அட்ஜெஸ்ட் வசதி, கீ லெஸ் என்ட்ரி, பவர் விண்டோஸ், 2 டின் ஆடியோ சிஸ்டம், கருப்பு வண்ண லெதரேட் இருக்கைகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், யுவோ லைட் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன. பெட்ரோல் வேரியண்ட் ரூ.7.59 லட்சத்திலும், டீசல் வேரியண்ட் ரூ.8.99 லட்சத்திலும் கிடைக்கும்.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

03. கியா சொனெட் எச்டிகே ப்ளஸ் வேரியண்ட்

இந்த வேரியண்ட்டானது 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, டீசல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். அதாவது, அனைத்து விதமான எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த வேரியண்ட் கிடைக்கும். புரொஜெக்டர் பனி விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டென்னா, க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் டீஃபாகர், ரியர் பார்சர் ட்ரெ, 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் உள்ளன.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

இதுதவிர்த்து, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளில் கியர் லிவருக்கு லெதரேட் உறை, ரியர் வியூ மானிட்டர் வசதி, இரண்டு ட்வீட்டர்கள், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் டிசிடி வேரியண்ட்டில், மல்டி டிரைவிங் மோடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.8.45 லட்சமும், 1.0 லிட்டர் பெட்ரோல் ஐஎம்டி மாடலுக்கு ரூ.9.49 லட்சமும், டிசிடி மாடலுக்கு ரூ.10.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மேனுவல் மாடலுக்கு ரூ.9.49 லட்சமும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.10.39 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

03. கியா சொனெட் எச்டிஎக்ஸ் வேரியண்ட்

இந்த வேரியண்ட்டானது 1.0 லிட்டர் பெட்ரோல் ஐஎம்டி மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் மாடல்களில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள், இரண்டு மஃப்ளர் அமைப்புடன் சைலென்சர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரோம் கதவு கைப்பிடிகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட் கீ, புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் ஆகியவை உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் எம்டி என இரண்டிற்கும் ரூ.9.99 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

04. கியா சொனெட் எச்டிஎக்ஸ் ப்ளஸ்

இந்த வேரியண்ட்டானது 1.0 லிட்டர் பெட்ரோல் ஐஎம்டி மற்றும் டீசல் மேனுவல் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கும். இதில், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி சவுண்ட் மூட் லைட் சிஸ்டம், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், போஸ் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், ஏர் பியூரிஃபயர், 4.2 அங்குல கலர் மல்டி இன்ஃபர்மேஷன் திரை, ஸ்மார்ட் வாட்ச் கனெக்ட்டிவிட்டி, டியூவல் டோன் பெயிண்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் என இரண்டிற்கும் ரூ.11.65 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

05. கியா சொனெட் ஜிடிஎக்ஸ் ப்ளஸ்

கியா சொனெட் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட் இதுதான். 1.0 லிட்டர் பெட்ரோல் ஐஎம்டி மற்றும் டீசல் மேனுவல் மாடல்களில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், முன்புற பார்க்கிங் சென்சார்கள், 16 அங்குல டைமண்ட் அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு வீல் கேப், சிவப்பு வண்ண பிரேக் காலிபர்கள், சிவப்பு வண்ண அலங்காரம் செய்யப்பட்ட பம்பர் அமைப்பு, ஃப்ளோட்டிங் ரூஃப் ரெயில்கள், வயர்லெஸ் சார்ஜர், ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். பெட்ரோல், டீசல் என இரண்டிற்கும் ரூ.11.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எது உங்களுக்கு சரியா இருக்கும்னு பார்த்துக்கோங்க?

இஷ்டம் போல வேரியண்ட் தேர்வுகள்

கியா சொனெட் எஸ்யூவியை பிடித்துவிட்டால், வாங்கிவிடும் அளவுக்கு பல்வேறு பட்ஜெட் கொண்ட வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மிக குறைவான பட்ஜெட் உள்ளவர்களுக்கு ரூ.8 லட்சத்திற்குள் ஆன்ரோடு விலையை வைத்து பேஸ் வேரியண்ட்டை தேர்வு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரச்னை இல்லாதவர்களுக்கு, அவர்களை திக்குமுக்காட செய்யும் அளவுக்கு அதிகபட்ச வசதிகளை டாப் வேரியண்ட் பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
Here are the complete details of variant wise features of all-new Kia Sonet SUV.
Story first published: Saturday, September 19, 2020, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X