ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

யுனிடெட் கிங்டம் சந்தையில் சொரெண்டோ வரிசையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஹைப்ரீட் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

கியா மோட்டார்ஸ் போன்ற உலகளவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அவற்றின் வழக்கமான மாடல்களில் ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சன்களை அறிமுகப்படுத்தி வருவதை கடந்த சில வருடங்களாக அதிகளவில் பார்த்து வருகிறோம்.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

குறிப்பாக ஐரோப்பாவில் மாசு உமிழ்வை குறைக்க வரிசையாக ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் சொரெண்டோவில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு ஜிடிஐ 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

இதில் பெட்ரோல் என்ஜின் 177 பிஎச்பி பவரையும், எலக்ட்ரிக் மோட்டார் 90 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எலக்ட்ரிக் மோட்டாரில் 13.8kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் உதவியுடன் 2021 கியா சொரெண்டோ ப்ளக்-இன் ஹைப்ரீட் காரை அதிகப்பட்சமாக 261 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும்.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

இந்த ஹைப்ரீட் அமைப்புடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. இது என்ஜின் ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்தான் சொரெண்டோவின் வரிசையில் ஆற்றல்மிக்க வேரியண்ட் ஆகும்.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

வெறும் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலின் மூலமாக காரை 57கிமீ வரையில் அதிகப்பட்சமாக இயக்கி செல்ல முடியும். இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் காரில் இருந்து ஒரு கிமீ-க்கு வெறும் 38 கிராம் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு மட்டுமே வெளியேறும் என கியா தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

7 நபர்கள் தாராளமாக அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கியா சொரெண்டோ எஸ்யூவி காரில் 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், கருப்பு கார்னிஷ், இரு-நிற ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

இவை மட்டுமின்றி கியாவின் UVO இணைப்புடன் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், நெடுஞ்சாலை பயணத்திற்கான ட்ரைவிங் அசிஸ்ட் சிஸ்டம், பின்பக்கத்தில் தன்னிச்சையாக நிலைகளை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் காற்று சஸ்பென்ஷன், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் 360-கோண கேமிரா போன்றவற்றையும் சொரெண்டோ காரில் கியா வழங்குகிறது.

ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ

சொரெண்டோவின் வேரியண்ட்களில் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படவுள்ள இந்த 2021 ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டின் விலை யுகே-வில் 53,095 யூரோக்களாக (ரூ.52.86 லட்சம்) நிர்ணயிக்கப்படவுள்ளது.

Most Read Articles
English summary
2021 Kia Sorento Plug-In Hybrid Gets 57 KM EV Only Range In The UK
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X