ஒரே சார்ஜில் 452 கிமீ செல்லும் கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஒரே சார்ஜில் 452 கிமீ பயணிக்கும் திறன் வாய்ந்த சோல் என்ற எலெக்ட்ரிக் கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது கியா மோட்டார் நிறுவனம். இந்த கார் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலும் கியா சோல் எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதிலிருந்தே இந்த கார் மீது இந்தியர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்து வருவதால், இந்த கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இதற்கு முன்னோட்டமாக இந்த கார் இன்று துவங்கி இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கியா சோல் காரின் டிசைன் மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. மேலும், காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் காரில் வெள்ளை வண்ணத் தேர்வில் நீல வண்ண கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலமாக வசீகரமாக காட்சித் தருகிறது.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

வெளிநாடுகளில் கியா சோல் எலெக்ட்ரிக் கார் 2 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 64kWh லித்தியம் அயான் பாலிமர் பேட்டரி மற்றும் 39.2kWh பேட்டரி மாடல்களில் கிடைக்கிறது. இதன் 64kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

கியா சோல் காருக்கு ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக பேட்டரியை சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பமும் உள்ளது.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

கியா சோல் காரில் ஈக்கோ, ஈக்கோ ப்ளஸ், ஸ்போர்ட் மற்றும் நார்மல் ஆகிய நான்குவிதமான டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் செயல்திறனை மாற்றிக் கொள்வதற்கு இது உதவும்.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த காரில் சவுண்ட் மூட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, இரட்டை வண்ண இன்டீயரியர் தேர்வு என ஏராளமான வசதிகளை பெற்றுள்ளது.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். 10 ஸ்பீக்கர்கள் கொண்ட 640 வாட் பிரிமீயம் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கியா சோல் எலெக்ட்ரிக் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

கியா சோல் கார் ரூ.15 லட்சத்திற்குள் விலை நிர்ணயம் செய்யப்படலாம். மஹிந்திரா இ-கேயூவி100, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்களுக்கு தக்க போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Kia Motors has showcased the new Kia e-Soul electric car at the Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X