புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரியா..?

அறிமுகமாகிய மிக குறுகிய காலத்திலேயே கியா நிறுவனத்தின் சொகுசு எம்பிவி ரக காரான கார்னிவல் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

தென்கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா, ஹூண்டாய் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், கடந்தாண்டுதான் இந்தியாவில் முதல் முறையாக கால் தடம் பதித்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிற்கான முதலாம் மாடலாக செல்டோஸ் என்ற எஸ்யூவி காரை களமிறக்கியது. மேலும், இரண்டாம் மாடலாக அதிக சொகுசு அம்சங்கள் அடங்கிய கார்னிவல் எம்பிவி ரக காரையும் அது களமிறக்கியது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இதில், கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு காருக்கு இமாலய அளவில் வரவேற்பு நிலவியது. இதற்கு இந்த கார் யாரும் எதிர்பார்க்காத விலையில் அதிக சொகுசு வசதிகளை உள்ளடக்கி களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதேபோன்று, சொகுசு வசதிகளின் மறு உருவமாக களமிறங்கியிருக்கும் கியா கார்னிவல் எம்பிவிக்கும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இதனை வெளிப்படுத்தும் விதமான ஓர் சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரத்தில் அரங்கேறியிருக்கின்றது. கியா கார்னிவல் எம்பிவி கார்கள் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் 11 கார்னிவல் எம்பிவி கார்கள் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த தரமான சம்பவத்தை சூரத் நகரத்தை மையமாகக் கொண்டு சூரத் மோட்டோகார் எல்எல்பி என்ற டீலர்தான் செய்திருக்கின்றார்.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

கியா நிறுவனத்தின் இந்த கார்னிவல் சொகுசு கப்பலா..? அல்லது காரா..? என்று கெள்வியெழுப்பும் வகையில் பல்வேறு லக்சூரி வசதிகளை உள்ளடக்கி காணப்படுவதே இத்தைகய வரவேற்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

மேலும், இதுபோன்ற கார்களின் வருகையால் இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா ஆகியவற்றால் செய்ய முடியாத சாதனை கியா செய்திருக்கின்றது. நாட்டின் மூன்றாவது இடத்தைப் பிடித்து டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்திருக்கின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இந்த மிகப்பெரிய சாதனையை வெறும் கியா செல்டோஸ் எஸ்யூவி காரை வைத்தே கியா மிகவும் அசாதாரணமாக செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், தற்போது கியா கார்னிவல் எம்பிவி காரும் களமிறங்கியிருக்கின்றது.

குறிப்பாக, கார்னிவல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதமான பிப்ரவரியில் மட்டும் 1,620 யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்று புத்தம் புதிய மைல் கல்லை எட்டியது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இந்த கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் ரூ. 24.95 லட்சம் முதல் ரூ. 33.95 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

தொடர்ந்து, இந்த கார் மூன்று விதமான தேர்வு நிலையைக் கொண்டதாக இருக்கின்றது. அவை பிரிமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் ஆகியவையாகும். இவையனைத்தும், வெவ்வேறு இருக்கை அமைப்பைக் கொண்டவையாகும். 7, 8 மற்றும் 9 ஆகிய இருக்கைத் தேர்வை இவை வழங்குகின்றன.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

அதிக இருக்கைகளைக் கொண்டிருந்தாலும் இந்த காரின் சொகுசு வசதியில் சிறிதளவும் குறை காண முடியாது. ஏனென்றால், இந்த கார் அந்தளவிற்கு இட வசதியைக் கொண்டிருக்கின்றது. காரினிவல் எம்பிவி கார் 5,115 மிமீ நீளம், 1,985 மிமீ விட்டம், 1,740 மிமீ உயரம் கொண்டதாக இருக்கின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

ஆகையால், காலை நீட்ட, எளிதாக ஏற மற்றும் இறங்க என அனைத்திற்கும் நல்ல வசதியைக் கொண்டதாக காணப்படுகின்றது. தொடர்ந்து, இந்த காருக்கு அதிக வீல் பேஸாக 3,060 மிமீ இடைவெளி வழங்கப்பட்டிருக்கின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

தொடர்ந்து, கரடு முரடான சாலையில் செல்வதற்கு ஏற்ப 18 இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, கியா கார்னிவல் நிறத்தேர்விலும் வாயை பிளக்க வைக்கின்ற வகையில் இருக்கின்றது. இது, அரோரா பிளாக் பியர்ல், ஸ்டீல் சில்வர் மற்றும் கிளாசியர் ஒயிட் பியர்ல் ஆகிய நிறத் தேர்வுகளில் கிடைக்கின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இதுமட்டுமின்றி, எஞ்ஜின் அம்சத்திலும் கியா கார்னிவல் நம்மை பிரம்மிப்பில் மூழ்க வைக்கின்றது. இந்த காரில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமான எஞ்ஜின் ஆகும்.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

கியா கார்னிவல் எம்பிவி காரில் பாதுகாப்பு அம்சங்களாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, டிஸ்க்குகள், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், ஸ்டெபிளிடிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ரோல்லோவர் மிடிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன், கூடுதலாக போஸ்ட்ஸ் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பக்கவாட்டு மற்றும் கர்டைன் ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோ் வசதிகளும் வழங்கப்படுகின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இதேபோன்று, பிரிமியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களாக ஒயர்லெஸ் போன் சார்ஜிங், இரட்டை சன்ரூஃப் (எலக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடையது), விஐபி சீட்டிங், 10.1 இன்ச் அளவுடைய திரை, ஹர்மன் கர்டனின் சவுண்ட் சிஸ்டம், ஒன் டச் ஸ்லைடிங் டூர், ஸ்மார்ட் பவர் டெயில்கேட், 3 நிலைகள் கொண்ட கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட 37 அம்சங்கள் கியாவின் யூவிஒ கனெக்டிவிட்டி அம்சத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இத்தகைய பல்வறு அம்சங்களை இந்த கார் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே பல தொழிலதிபர்கள் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே இன்று ஒரே நாளில் ஒரு டீலரின் மூலமாக மட்டும் 11 கார்னிவல் எம்பிவி கார்கள் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றது.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

இவ்வாறு ஒரே நாளில் பல்காக 11 கார்னிவல் டெலிவரி கொடுக்கப்படுவது முதல் முறையல்ல. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளன்றுகூட ஒரே நாளில் 10 கார்னிவல் யூனிட்டுகல் டெலிவரி வழங்கப்பட்டன.

புது அத்தியாயம் படைக்கும் கியா கார்னிவல் சொகுசு எம்பிவி.. ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதா..?

கியா நிறுவனம் இந்த சொகுசு வசதிகளை ஏராளமாக வழங்கும் கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சுனர் போன்ற மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் களமிறக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த கார் சொகுசு காரான மெர்டிசிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் கார்களுக்கும் போட்டியாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia Surat Dealer Delivers 11 Carnival Units In 1 Day New Record. Read In Tamil.
Story first published: Monday, March 9, 2020, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X