இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் ஓர் ஆண்டுநிறைவு எடிசன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் தற்போது இந்த ஸ்பெஷல் எடிசனை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செல்டோஸ் காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் மூலம் இந்திய சந்தைக்குள் நுழைந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

இந்த வகையில் இந்த கார் இந்தியாவில் விற்பனையை துவங்கி ஒரு வருடம் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது. இதனை நினைவுக்கூரும் விதத்தில் செல்டோஸின் ஸ்பெஷல் எடிசனை ஆண்டுநிறைவை முன்னிட்டு கொண்டுவர கியா நிறுவனம் திட்டமிட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

இந்த நிலையில் டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஆவண படங்களில், வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் மாற்றங்களுடன் எச்டிஎக்ஸ் என்ற ஒற்றை ட்ரிம் நிலையில் மட்டும்தான் செல்டோஸ் ஆண்டுநிறைவு எடிசன் கார் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

முழு அரோரா கருப்பு பேர்ல் மற்றும் ஆரோரா கருப்பு நிறத்துடன் க்ளாசியர் வெள்ளை பேர்ல் என்ற நிறங்களை வழக்கமான விற்பனை மாடலில் இருந்து பெற்றுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஆரோரா கருப்பு நிறத்துடன் க்ராவிட்டி க்ரே மற்றும் அரோரா கருப்பு நிறத்துடன் இரும்பின் சில்வர் என்ற நிறங்களையும் புதியதாக பெறவுள்ளது.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

வெளிப்புறத்தில் மாற்றங்களாக புதிய முன்பக்கத்தையும், பின்பக்கத்தில் சறுக்கு தட்டுகளையும் பெற்றுவரவுள்ள புதிய ஆண்டுநிறைவு எடிசன் காரில் கிச்சிலி பழத்தின் நிறத்தில் ஃபாக் விளக்கிற்கான குழி & பக்கவாட்டு சில்கள், மையத்தில் ஆரஞ்ச் நிறத்தில் மூடியுடன் 17 இன்ச்சில் ராவன் கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

இவற்றுடன் சுற்றிலும் ஆண்டுநிறைவு ஸ்பெஷல் எடிசனிற்கான முத்திரையை பெற்றுவரவுள்ள இந்த கார் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதியுடன் உட்புறத்தில் ராவன் கருப்பு நிறத்தில் லெதர் இருக்கைகள், கருப்பு நிறத்தில் டேஸ்போர்டு மற்றும் கதவு ட்ரிம்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் என்று இந்த படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

மற்றப்படி என்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. செல்டோஸ் எச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளன.

இந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்...

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் நிலையாக வழங்கப்பட, சிவிடி மற்றும் டார்க் கன்வெர்டர் யூனிட்கள் கூடுதல் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஆண்டுநிறைவு எடிசனை வரும் நாட்களில் அறிமுகப்படுத்திவிடும் என தெரிகிறது. உடனுடக்குடனான அப்டேட்களை தெரிந்துகொள்ள நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

Most Read Articles

English summary
Kia Seltos Anniversary Edition details leaked ahead of launch
Story first published: Tuesday, October 13, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X