விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

கியாவின் எக்ஸீட் கார் ஆட்டோ எக்ஸ்போ 2020-இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இந்த கார்குறித்த சில சிறப்பு தகவல்களும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

தென் கொரிய நிறுவனமான கியா, க்ராஸோவர் ரகத்திலான எக்ஸீட் காரை இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் நகர பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ளது. ஆகையால், இதன் தோற்றம் எஸ்யூவி-யைப் போன்று காட்சியளித்தாலும், பயன்பாட்டின்போது ஹேட்ச்பேக்கைப் போன்று செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

இந்த காரை ஐரோப்பிய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அங்கு ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கியா ஸ்டானிக் மற்றும் கியா ஸ்போர்டேஜ் ஆகிய இரு மாடல்களுக்கும் மத்தியில் இந்த கார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

எக்ஸீட் க்ராஸோவர் காரை கியா நிறுவனம் ஸ்போர்ட்டி லுக்கில் வடிவமைத்துள்ளது. இதற்காக ஒரு சில பேனல்கள் அதன் சகோதல மாடல்களான ஐந்து கதவுகள் கொண்ட கார்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

ஆனால், இதில் காணப்படும் ஹெட்லேம்ப் புதிய டிசைனைப் பெற்றிருக்கின்றது. அது ஐஸ் க்யூபைப் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளது. இதற்கு மேலே இன்டிகேட் செய்கின்ற வகையில் மெல்லிய எல்இடி மின் விளக்குள் நிறுவப்பட்டுள்ளது. இது காருக்கு மிகுந்த கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது.

இதுமட்டுமின்றி, கியா எக்ஸீட் தொழில்நுட்பத்தின் களஞ்சியமாகவும், பல நட்சத்திரங்கள் சொகுசு விடுதிக்கு இணையான வசதிகளையும் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

அந்தவகையில், ஃபாவுக்ஸ் லெதர் இருக்கை, அட்ஜெஸ்டபிள் லம்பர் சப்போர்ட் முன்பக்க இருக்கை, ஹீடட் இருக்கை, ஹீடட் ஸ்டியரிங் வீல், ட்யூவல் ஏசி ஸோன், எலக்ட்ரானிக் பார்கிங் பிரேக், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் பவர் டெயில்கேட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த காரில் காணப்படுகின்றது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

இத்துடன், கியா எக்ஸீட் காரில் 10.25 இன்சிலான ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளது. இது காரை பற்றி பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள உதவும்.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

மேலும், கியாவின் கன்னெக்ட் வசதி, ஸ்மார்ட் பார்க் அசிஸ்ட், 12.3 இன்ச் கொண்ட டிஎஃப்டி க்ளஸ்டர் டிஸ்பிளே, பிளைண்ட் ஸ்பாட் கொள்ளிசன் வார்னிங், லேன் கீபிங் அசிஸ்ட், லேன் ஃபாளோயிங் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ஃபார்வேர்டு கொள்ளிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், இஎஸ்சி, விஎஸ்எம், டிபிஎம்எஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக்குகள் போன்ற பல்வேறு அதிநவீன வசதிகள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் கியா எக்ஸீட்... ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனம்... சிறப்பு தகவல்!

இதுதவிர எஞ்ஜின் தேர்விலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் கியா எக்ஸீட் இருக்கின்றது. குறிப்பாக பெட்ரெல் மற்றும் டீசல் எஞ்ஜிந் தேர்வில் கிடைப்பது மிகச் சிறப்பான ஒன்று. இத்துடன், இந்த காரில் குறைந்த மாசு உமிழ்விற்காக 48V மைல்ட் ஹைபிரிட் திறன் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைதான் கியா நடப்பாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia Unveils Xceed Crossover At Auto Expo 2020. Read In Tamil.
Story first published: Thursday, February 6, 2020, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X