சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கும் ஆர்டிஓ அதிகாரி!

சந்தைக்கு பிறகான நான்கு அலாய் வீல்களுக்கு அபராதம் விதித்த சம்பவத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக ஆர்டிஓ அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

வாகனங்களில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மாற்றங்களுக்கு எதிராக கேரள மோட்டார் வாகனத்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகத் தொடங்கியிருக்கின்றன.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

இந்த நிலையில், இளைஞர் ஒருவர் தனது நண்பர் சந்தைக்கு பிறகான (ஆஃப்டர் மார்க்கெட்) வீல்களைப் பயன்படுத்தியதற்காக ஒரு வீலுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதத்தைப் பெற்றதாக கூறியிருந்தார். இதன்படி, ஒட்டுமொத்தமாக நான்கு ஆஃப்டர் மார்க்கெட் வீல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை அந்த இளைஞருக்கு கேரளா மோட்டார் வாகனத்துறை அபராதம் வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

இளைஞரின் இந்த குற்றச்சாட்டு வீடியோ தற்போது மிக வேகமாக வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி ஒவ்வொரு வீலுக்கும் தனி தனியாக அபராதம் வழங்க முடியும் என்ற கேள்வி வாகன ஆர்வலர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

இந்நிலையில், கேரள மாநிலம், கோட்டயம், ஆர்டிஓ அதிகாரி டோஜோ எம் தாமஸ், இளைஞரின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை மலையாள செய்தி தளமான வனிதா மூலம் அவர் கூறியிருக்கின்றார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

கோவிட்-19 வைரஸ் காரணத்தால் வாகன சோதனை கடந்த காலங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வைரஸ் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த வேலையில் வாகனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டின் ஜூன்-ஜூலை மாதங்களில் சாலை விபத்தின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தோமேயானால் நடப்பாண்டில் 60 சதவீதம் சாலை விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால், லேசான தளர்வுகளுடன் இருந்த பொதுமுடக்கத்தை மக்கள் தவறாக பயன்படுத்தியதே ஆகும். தளர்வுகள் நடைமுறையில் இருந்தபோது அலட்சியத்துடன் வாகன ஓட்டிகள் செயல்பட்டதன் விளைவாகவே அதிக விபத்துகள் அரங்கேறின.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

இந்த நிலை தற்போதும் நீடித்த வண்ணம் இருக்கின்றது. எனவேதான் இந்த சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாக மோட்டார் வாகனத்துறை புதிய யுக்திகளைக் கையாத் தொடங்கியிருக்கின்றது அவ்வாறு, மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளிலேயே சட்டத்திற்கு புரம்பான அக்சஸெரீஸ்கள் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டு வருகின்றது.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

இப்போது முக்கிய புகார் என்னவென்றால், நான்கு சந்தைக்கு பிறகான அலாய் வீல்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டருப்பது ஆகும். இது செல்லுபடியாகாத ஓர் நடவடிக்கையாகும். வாகனத்தின் அளவைக் காட்டிலும் வெளிப்புறம் வரை நீண்டிருக்கும் அலாய் சக்கரங்களுக்கான அபராதம் ரூ. 5 ஆயிரம் ஆகும். நான்கு வீல்களுக்கும் ஒரே அபராதம்தான். ஒவ்வொரு வீல்களுக்கும் தனி தனியாக இதனை விதிக்க முடியாது.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

இதேபோன்று பிற மாடிஃபிகேஷன்கள், அதாவது, கருப்பு நிற கண்ணாடிகளை ஜன்னல்களாக பயன்படுத்துவது, ஹாரனை மாற்றுவது, உடல் அமைப்பை மாற்றுவது ஆகியவற்றிற்கும் தனியாக அபராதம் விதிக்க முடியும். உச்ச நீதிமன்ற அறிவிப்பின்படி, அடர் கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதற்கு ரூ. 250 வரை அபராதம் விதிக்க முடியும்.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

தொடர்ந்து, மாற்றியமைக்கப்பட்ட அணிகலன்களைக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் இதற்கும் தனியாக அபராதத்தை வழங்க முடியும் என ஆர்டிஓ அதிகாரி டோஜோ கூறினார். இருப்பினும், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் இளைஞர் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டிற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது தெரிய வரவில்லை.

சந்தைக்கு பிறகான வீல் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக அபராதம் விதிக்க முடியுமா? விளக்கம் தரும் ஆர்டிஓ அதிகாரி!

கடந்த காலங்களில் மாற்றியமைக்கப்பட்ட ஹேண்டில் பார்களுக்கு கேரள மோட்டார் வாகனத்துறை ரூ. 5000 அபராதம் விதித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதோபன்று, புதிய பிஎஸ்6 தர ஹிமாலயன் பைக்கில், அதன் சைலென்சர் அப்கிரேட் செய்யப்பட்டதை அறியாத காவலர்கள், கூகுளின் உதவியுடன் புதிய மாற்றம் பற்றி அறிந்த பின்னரே பைக்கரை விடுவித்தனர்.

இவ்வாறு, கேரள மோட்டார் வாகனத்துறை அண்மைக் காலங்களாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே காருக்குள் அமர்ந்தவாறு, அந்த இளைஞர் தனது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அந்த வீடியோவைதான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். இந்த விவகாரம் தற்போது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kottayam RTO Enforcement Officer Tojo M Thomas Interview About Alloy Wheel Hefty Fine. Read In Tamil.
Story first published: Wednesday, September 30, 2020, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X