லம்போர்கினி ஜராமா ஜிடி, எத்தனை பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்? 50 வருடங்களுக்குமுன் அறிமுகமானதாம்

லம்போர்கினி பிராண்டில் 70களில் விற்பனையில் இருந்த ஜராமா ஜிடி கார் அறிமுகம் செய்யப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினி ஜராமா ஜிடி, எத்தனை பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்? 50 வருடங்களுக்குமுன் அறிமுகமானதாம்

லம்போர்கினி ஜராமா ஜிடி கார் முதன்முதலாக 1970 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜராமா என்பது காளை சண்டைகளுக்கு பிரசித்தி பெற்ற மாட்ரிட் நகரின் வடக்கு பகுதியின் பெயர் ஆகும்.

லம்போர்கினி ஜராமா ஜிடி, எத்தனை பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்? 50 வருடங்களுக்குமுன் அறிமுகமானதாம்

லம்போர்கினி பிராண்டின் 2+2 கிராண்ட் டூரிங் செடான் கான்செப்ட் மாடலின் கடைசி பரிணாம வளர்ச்சியாக கொண்டுவரப்பட்ட ஜராமா ஜிடி-இல் வி12-சிலிண்டர், 4-லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டது. தொழிற்நுட்ப அம்சங்களில் முந்தைய 400ஜிடி மற்றும் இஸ்லெரோ கார்களை ஜராமா ஜிடி ஒத்திருந்தது.

கோண லைன்களுடன் காரின் தோற்றம் கிட்டத்தட்ட 70களில் விற்பனையில் இருந்த கார்களுக்கு இணையானதாக கொண்டுவரப்பட்டது. சேசிஸ் மறுவேலை செய்யப்பட்டதாகவும், ப்ரேக்கிங் சிஸ்டம் நான்கு பெரிய டிஸ்குகள் உடனும், அதில் முன்பக்க டிஸ்க் போதிய இட வசதிகளுடனும் வழங்கப்பட்டதாக லம்போர்கினி வெளியிட்டுள்ள இந்த காரை பற்றிய தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

லம்போர்கினி ஜராமா ஜிடி, எத்தனை பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்? 50 வருடங்களுக்குமுன் அறிமுகமானதாம்

ட்ராக்கின் அகலம் 10 செ.மீ கூடுதல் அகலமானதாக 1,490 மிமீ-லும், 15 இன்ச் காம்பக்னோலோ மெக்னீசியம் சக்கரங்களும் ஜராமா ஜிடி காரில் வழங்கப்பட்டன. 6 இரட்டை-உடல் வெபர் 40 டிசிஒசி கார்புரேட்டர்களுடன் வழங்கப்பட்ட இதன் வி12, இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்ஸ் என்ஜின் அதிகப்பட்சமாக 350 எச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விளங்கியது.

இந்த என்ஜின் உதவியுடன் காரை அதிகப்பட்சமாக 260 kmph வேகத்தில் இயக்க முடிந்தது. வெளிப்புறத்திற்கு ஏற்ப உட்புறமும் லக்சரி தரத்தில் காட்சியளித்தது என்பதை நான் சொல்லியாக வேண்டும் என்றில்லை. ஜராமா ஜிடி காரின் கடைசி 100 யூனிட்கள் 1972ல் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

லம்போர்கினி ஜராமா ஜிடி, எத்தனை பேருக்கு இந்த காரை பற்றி தெரியும்? 50 வருடங்களுக்குமுன் அறிமுகமானதாம்

ஏனெனில் 1972 ஜெனிவா மோட்டார் கண்காட்சிக்கு பின் இதற்கு மாற்றாக ஜராமா ஜிடிஎஸ் காரை லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்தது. இந்த வெர்சனில் பொருத்தப்பட்ட என்ஜின் அதிகப்பட்சமாக 350 எச்பி பவரை வெளிபடுத்தக்கூடியதாக இருந்தது. பெயரில் கூடுதலாக எஸ் சேர்க்கப்பட்டதற்கு ஏற்ப அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட அப்கிரேட்கள் காரில் கொண்டுவரப்பட்டிருந்தன.

மொத்தமாக உலகளவில் இதுவரை 328 லம்போர்கினி ஜராமா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 176 ஜராமா ஜிடி கார்களும், 152 ஜராமா ஜிடிஎஸ் கார்களும் அடங்கும். இத்தகைய சிறப்புமிக்க டூரிங் செடான் கார் 50 வருடங்கள் நிறைவு செய்தது லம்போர்கினிக்கு உண்மையில் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

Most Read Articles
English summary
Lamborghini celebrates the 50th Anniversary of the Jarama GT
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X