ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

இத்தாலிய நாட்டை சேர்ந்த சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி தனது முதல் டிஜிட்டல் முத்திரையை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. பிட்ஸ்டாம்ப் என்ற டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் அமைப்பு உடன் இணைந்து இந்நிறுவனம் வெளியிடவுள்ள இந்த டிஜிட்டல் முத்திரை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

லம்போர்கினி நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள டிஜிட்டல் முத்திரை முழுக்க முழுக்க இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஹூராகென் எவொ பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் மாடலுக்காக அர்ப்பணிக்கப்படவுள்ளது. டிஜிட்டல் முத்திரைகள் உருவாக்கத்தையும், அவற்றை சேகரிக்கும் செயல்முறைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த லம்போர்கினி ஹூராகென் எவொ மாடலின் டிஜிட்டல் முத்திரை ஆப் மூலமாக வெளியிடப்படவுள்ளது.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

கொரோனா வைரஸினால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த இந்நிறுவனத்தின் தொழிற்சாலை இந்த மே மாத துவக்கத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் ஹூராகென் எவொ பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் மாடலை லம்போர்கினி நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

நிறுவனத்தின் இத்தனை வருட கால தனித்துவமான கார்களின் டிசைன்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த முத்திரை வெளியிடப்படுவதாக லம்போர்கினி நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து இதுவரை 20க்கும் அதிகமான டிசைனில் தனித்துவமான கார்கள் வெளிவந்துள்ளன.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

இன்று முதல் பிட்ஸ்டாம்ப்ஸ் ஆப்-ல் கிடைக்கும் லம்போர்கினி ஹூராகென் எவொ பின்சக்கர ட்ரைவ் ஸ்பைடர் மாடலின் முத்திரை, 20,000 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு முத்திரையும் ஒரு டிஜிட்டல் பொருள் ஆகும். அதாவது ஒவ்வொரு முத்திரையும் டிஜிட்டல் தரத்தில் தகவல்களை கொண்டுள்ளது.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

இதன் நேர்த்தியான தன்மையை டிஜிட்டல் பொருட்களை கையாண்டு வரும் ப்ளாக்செயின் தொழிற்நுட்பம் அமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் இந்த முத்திரை வாங்குவது, சேகரிப்பது மற்றும் வேறொருவருக்கு விற்பது உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட காகித முத்திரைக்கு இணையாகவே இருக்கும்.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

மேலும் பிட்ஸ்டாம்ப்ஸ் ஆப், லம்போர்கினி ரசிகர்களுக்கு அந்நிறுவனத்தின் முதல் டிஜிட்டல் முத்திரையை மட்டும் காட்டுவது மட்டுமில்லாமல், தனது சேகரிப்பு முத்திரைகளையும் ரசிக்க அனுமதிக்கிறது. ஆனால் அவற்றை வாங்க தற்போதைக்கு இயலாது.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

லம்போர்கினியின் முதல் டிஜிட்டல் முத்திரையை வாங்குபவர்கள் அதனை இ-கார்டு மூலமாக மற்றவர்களுக்கு பரிசாக வழங்கலாம். அல்லது இதனை விற்க நினைப்போர் இன்னும் சில மாதங்களில் திறக்கப்படவுள்ள முத்திரை கடைகளுக்கு சென்று விற்கலாம்.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

இந்த டிஜிட்டல் முத்திரையில் காட்சியளிக்கும் ஹூராகென் எவொ பின்சக்க ட்ரைவ் காரை பற்றி கூற வேண்டுமென்றால், இந்த காரில் 5.2 லிட்டர் வி10 என்ஜினை லம்போர்கினி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 602 பிஎச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த ஆற்றல் வழக்கமான ஹூராகென் எவொ அனைத்து சக்கர ட்ரைவ் மாடலை காட்டிலும் 29 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறன் குறைவாகும்.

ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு வழங்கப்பட்டுள்ள 7-ஸ்பீடு லம்போர்கினி டோப்பியா ஃப்ரிஸியோனே ட்யூல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் காரை 0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3. 3 வினாடிகளில் அடைய செய்கிறது.

ஹூராகென் மாடலின் இந்த புதிய வெர்சனின் அதிகப்பட்ச வேகம் 325kmph ஆகும்.

Most Read Articles
English summary
Lamborghini Launches Huracan EVO RWD Spyder Collector's Digital Stamp
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X