Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
- Movies
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
9 வருடங்களில் 10,000 அவென்டேடார் கார்கள் தயாரிப்பு... புதிய மைல்கல்லை தொட்ட லம்போர்கினி...
கடந்த 9 வருடங்களில் மொத்தம் 10,000 அவென்டேடார் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களின் தயாரிப்பு பணிகளை இதுவரை நிறைவு செய்துள்ளதாக லம்போர்கினி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமாக லம்போர்கினி உள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து தற்போது தயாரிப்பு பணிகளை முடித்து கொண்டுள்ள ‘10,000' என்ற சேசிஸ் எண்ணை கொண்ட அவென்டேடார் எஸ்விஜே ரோட்ஸ்டர் கார், வி12 என்ஜின் உடன் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்துள்ளது.

மேலும் இந்த லம்போர்கினி அவென்டேடார் காருக்கு க்ரே நிற பெயிண்ட் அமைப்பு சிவப்பு நிற லிவரியுடன் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாய்லாந்து நாட்டு சந்தைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் காரின் உட்புற கேபின் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி அவென்டேடார் முதன்முதலாக 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் மற்ற லம்போர்கினி கார்களை போல் மிக விரைவாகவே வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்க துவங்கிய அவென்டேடாரில் பொருத்தப்படும் வி12 என்ஜின் அதிகப்பட்சமாக 8250 ஆர்பிஎம்-ல் 700 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

அவென்டேடார் என்ஜினின் இந்த ஆற்றல் அளவுகள் இந்த காரின் அறிமுகமான சமயத்தில் மிக பெரியதாக பார்க்கப்பட்டது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறன் கொண்ட லம்போர்கினியின் இந்த ஸ்போர்ட்ஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 350kmph ஆகும்.

கடந்த 9 வருடங்களில் அவென்டேடாரின் பல மாடல்களை லம்போர்கினி அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையில் அவென்டேடார் ரோட்ஸ்டர் 2012ல் அறிமுகமானது. மிகவும் தனித்துவமான தோற்றத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த ரோட்ஸ்டர் மாடலில் மேற்கூரையானது கார்பன் ஃபைஃபரால் இரு பிரிவுகளாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2012 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அவென்டேடார் ஜே வெளியிடப்பட்டது. 700 பிஎச்பி பவர் உடன் வெளிவந்த இது ‘திறந்த' சூப்பர் ஸ்போர்ட்ஸ் காராகும். இவற்றிற்கு பிறகு புதிய அவென்டேடார் மாடல் வெளிவருவதற்கு சில வருடங்கள் இடைவெளியானது.

இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகவே, 2016ல் அவென்டேடார் மியூரா ஹோமேஜ் விற்பனைக்கு வந்தது. ஸ்பெஷல் சீரிஸ் காரான இது, லம்போர்கினியின் வி12 சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள் வெளிவருவதற்கு முன்னர், அதாவது இந்நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாக்களின்போது விற்பனையில் இருந்த மியூரா காருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டது.

இதன் காரணமாக வெறும் 50 யூனிட்கள் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. அதே 2016ஆம் ஆண்டில் லம்போர்கினி அவென்டேடர் எஸ் அறிமுகமானது. புதிய காற்று இயக்கவியலுக்கு இணக்கமான தோற்றத்தை பெற்றுவந்த இதில் ரீடிசைனில் சஸ்பென்ஷன், கூடுதல் ஆற்றல் மற்றும் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுனர் இயக்கவியல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதன் பெயரில் உள்ள எஸ் என்பது மற்ற லம்போர்கினி மாடல்களை காட்டிலும் இது மேம்படுத்தப்பட்ட வெர்சன் என்பதை குறிக்கிறது. ஏனெனில் இதில் பொருத்தப்பட்ட 6.5 லிட்டர் வி12 என்ஜின் அதிகப்பட்சமாக 740 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்தது.

இவற்றிற்கு அடுத்து 2018ல் அவென்டேடர் எஸ்விஜே மாடலை விற்பனைக்கு கொண்டுவந்தது லம்போர்கினி. இதன் பெயரில் உள்ள எஸ்வி என்பது சூப்பர்வெலோஸ் என்பதையும், ஜே என்பது ஜோடா-வையும் குறிக்கும். இதில் இருந்து ட்ராக்கிலும் செயல்திறனிலும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் எத்தகைய நிலையில் இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

அவென்டேடர் எஸ்விஜே-வும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் (900 யூனிட்கள்) தான் விற்பனை செய்யப்பட்டது. லம்போர்கினி அவென்டேடர் மாடல்களில் கடைசியாக கடந்த ஆண்டில் அவென்டேடர் எஸ், ஸ்கைலர் க்ரே நிறத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.