Just In
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- 3 hrs ago
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
Don't Miss!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Sports
பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லம்போர்கினி காரை சொந்தமாக்குவது மிக சுலபம்! அறிமுகமானது விலை குறைந்த வாகனம்! நமக்கு வாய்ப்பு உள்ளதா?
லம்போர்கினி நிறுவனம் விலைக் குறைந்த வாகனத்தை தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இளைஞர்களின் கனவு வாகனங்களில் லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்பும் ஒன்று. ஆனால், இந்த நிறுவனத்தின் கார்களோ ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வகையில் உச்சபட்ச விலையில் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில் அனைவராலும் நுகரக் கூடிய வகையில் புதிய வாகனம் ஒன்றை லம்போர்கினி தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக லம்போர்கினி நிறுவனம் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனத்துடன் கூட்டணி தொடங்கியிருக்கின்றது. சியோமி நிறுவனம், செல்போன் மட்டுமின்றி சில அத்தியாவசிய பொருட்களையும் தயாரித்து வருகின்றது. குறிப்பாக, மின்சாரம் சார்ந்த சாதனங்களை அது விற்பனைச் செய்து வருகின்றது.

அந்தவகையில், எலெக்ட்ரிக் மின்சார இருசக்கர வாகனங்களையும் அது ஒரு சில நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த நிலையிலேயே லம்போ மற்றும் சியோமி கூட்டணி சமீபத்தில் அரங்கேறியிருக்கின்றது. இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே இரு நிறுவனங்களும் இணைந்து கோ-கார்ட் ரகத்திலான மின்சார வாகனத்தை தயாரித்து, தற்போது அறிமுகமும் செய்திருக்கின்றன.

இது தற்போது விற்பனையில் இருக்கும் லம்போர்கினி நிறுவனத்தின் சொகுசு கார்களைக் காட்டிலும் சற்று குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. நைன்பாட் கோகார்ட் ப்ரோ லம்போர்கினி எடிசன் எனும் பெயரிலேயே அந்த வாகனத்தை இவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். மின்சாரத்தால் இயங்கும் இந்த சிறிய ரக வாகனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இயக்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் இந்த கோகார்ட் மின்சார வாகனத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து மின் விளக்குகளுமே எல்இடி தரத்திலானதாகும். இத்துடன், ஸ்பாய்லர் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஸ்பீக்கர்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதேமாதிரியான வசதியை லம்போர்கினியின் பிரபல கார் மாடலான ஹூராகேன் வி10-ல் நம்மால் பார்க்க முடியும்.

மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனை புதிய கோகார்ட் மின்சார வாகனம் பெற்றிருக்கின்றது. ஒரு வேலை இந்த கோகார்ட் இந்தியாவில் விற்பனைக்கு வருமேயானால் நிச்சயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களால் மட்டுமே இதனை இயக்க முடியும். ஏனெனில், 25கிமீட்டருக்கு அதிகமான வேகத்தில் இயங்க்ககூடிய வாகனத்தை இயக்க இந்தியாவில் லைசென்ஸ் கட்டாயம் ஆகும். ஆனால், லம்போ கோகார்ட்-இன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், இதன் வருகை சந்தேகமே.

கோகார்ட் மின்சார வாகனத்தில் மின் சக்தி தேவைக்காக 432Wh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 20கிமீ தூரம் வரை தாராளமாக பயணிக்கலாம். இது ஒட்டுமொத்தமா 100 கிலோ எடைக் கொண்ட வாகனம் ஆகும். இதற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 1,440 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் இது ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். இந்த சின்ன வாகனத்திற்கு ஒரு லட்சமா என நீங்கள் கேள்வியெழுப்பலாம், லம்போர்கினி நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைந்த விலையுடைய வாகனம் ஆகும். ஆமாம், லம்போர்கினியின் பிற கார்கள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய்கள் மதிப்பில் விற்கப்பட்டு வருகின்றது.

நைன்பாட் கோகார்ட் ப்ரோ வாகனம் பல்வேறு அதி சிறப்பு வசதிகளை உள்ளடக்கியிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த வாகனம் அவ்வளவு எளிதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்களில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் விதமாக பாதுகாப்பு கவசங்கள் மிக உறுதித் தன்மையுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை இது பெற்றிருக்கின்றது.