Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டெலிவிரிக்கு தயாரானது 10,000-மாவது உருஸ் எஸ்யூவி கார்... தயாரிப்பில் புது உச்சத்தை தொட்ட லம்போர்கினி
ஆட்டோமொபைலி லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ்யூவி மாடலின் 10,000-மாவது மாதிரியின் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து டெலிவிரி செய்ய தயாராகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடலின் தயாரிப்பு பணிகளை இத்தாலி, சாண்ட்'அகட்டா போலோக்னீஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகளை முடித்து கொண்டுள்ள உருஸ் எஸ்யூவி கார் ரஷ்ய நாட்டிற்காக தயாரிக்கப்பட்டதாகும்.

10,000 என்ற சேசிஸ் எண்ணுடன் வெளிவந்துள்ள இந்த சூப்பர் காரானது நீரோ நோக்டிஸ் மேட் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குறிப்பிட்ட லம்போர்கினி உருஸ் கார் கார்பன் ஃபைபர் தொகுப்பு மற்றும் கருப்பு & ஆரஞ்ச் என்ற ட்யூல்-டோன் உட்புறத்தை பெற்று வந்துள்ளது.

லம்போர்கினியின் அதிக-விற்பனை காராக உள்ள உருஸ் எஸ்யூவி மாடல் முதன்முதலாக 2017ல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் தான் இந்த எஸ்யூவி சூப்பர்கார் சந்தையில் வருடம் முழுவதும் விற்பனையில் இருந்தது.

2019ல் மொத்தம் 4,962 உருஸ் கார்களை உலகளவில் லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்தது. இதில் 50 யூனிட்கள் இந்தியாவில் அடங்கும். உருஸ் மாடலால் கடந்த ஆண்டில் விற்பனையான மொத்த லம்போர்கினி கார்களின் எண்ணிக்கை 8,205 ஆக அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை 5,750 லம்போர்கினி கார்கள் விற்பனையான 2018ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 43 சதவீதம் அதிகமாகும். உருஸ் கார்களுக்கு இவ்வாறான வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் என்று இந்நிறுவனம் முன்னரே கணித்திருந்தது போல.

ஏனெனில் இந்த எஸ்யூவி காரின் அறிமுகத்திற்கு முன்னதாக தான் தொழிற்சாலையின் பரப்பளவை 80,000 சதுர மீட்டரில் இருந்து 160,000 சதுர மீட்டராக லம்போர்கினி நிறுவனம் விரிவுப்படுத்தியது. இத்தகைய சிறப்பு பெற்ற உருஸ் மாடல் சமீபத்தில் தான் பேர்ல் காப்ஸ்யூல் என்ற பெயரில் புதிய வெளிப்புற நிற தொகுப்பை பெற்றிருந்தது.

இந்த புதிய நிற தொகுப்பினால் காரின் மேற்கூரை, பின்புற டிஃப்யூஸர், ஸ்பாய்லர் லிப் உள்பட சில பாகங்கள் கருப்பு நிறத்துடன் கார் மொத்தமும் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகின. இதன்படி வாடிக்கையாளர்களுக்கு வெர்டே மான்டிஸ் (பச்சை), அரான்சியோ பொரியாலிஸ் (ஆரஞ்சு) மற்றும் கியாலோ இன்டி (மஞ்சள்) என்ற மூன்று நிற தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உருஸ் எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3.6 வினாடிகளிலும், 200kmph வேகத்தை 12.8 வினாடிகளிலும் அடையக்கூடிய இந்த காரின் அதிகப்பட்சமான வேகம் 306kmph ஆகும்.