எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

அமெரிக்க ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த கிழக்கு கடற்கரை டிஃபெண்டர்ஸ் ஆட்டோமோட்டிவ் டிசைன் என்ற நிறுவனம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடலில் 100kWh ஆற்றலை வழங்கக்கூடிய டெஸ்லா எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி எலக்ட்ரிக் மாடலாக மாற்றியுள்ளது. வழக்கமான வி8 என்ஜினை விட இந்த எலக்ட்ரிக் மோட்டார் எந்த விதத்தில் சிறந்தது என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் பிரிட்டிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். பல ஆண்டுகளாக விற்பனையில் உள்ள இந்த மாடல் சிறிது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் மற்றும் சில ஜப்பானிய மாடல்களின் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

இவ்வாறு சில கார்களுடன் ஒத்து காணப்பட்டாலும், உலகளாவிய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடல்கள் வலுவான இடத்தை பிடித்துள்ளன. ஆஃப் ரோட்டிற்கு ஏற்ற வகையில் 90 மற்றும் 110 என்ற இரு விதமான வடிவங்களிலும் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடலை தொடர்ந்து 2020மை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

ரூ.69.99 லட்சத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ள 2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாடலுக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. புதிய தலைமுறை டிஃபெண்டர் மாடலில் வழக்கமான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 296 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

ஃப்ளோரிடாவை சேர்ந்த கிழக்கு கடற்கரை டிஃபெண்டர் ஆட்டோமோட்டிவ் டிசைன் குழுவினர் இதில் சிறிது வித்தியாசத்திற்காக கிளாசிக் டிஃபெண்டர் 110 மாடல்களில் டெஸ்லாவின் 100kWh எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி வருகின்றனர். டெஸ்லாவின் இந்த எலக்ட்ரிக் மோட்டார் சிங்கிள் சார்ஜில் 350கிமீ-க்கும் அதிகமான தூரத்திற்கு காரை இயக்கவல்லது.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

இதன் மூலமாக 0-விலிருந்து 100 km/h என்ற வேகத்தை வெறும் 5.5 வினாடிகளில் கார் எட்டிவிடும். சுவர் சார்ஜர் மூலமாக 0%-லிருந்து முழுவதும் நிரம்ப 10 மனிநேரங்களை எடுத்து கொள்ளும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் 3-பேஸ் யூனிட்டில் 5 மணிநேரங்களிலேயே நிரம்பிவிடும்.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

எலக்ட்ரிக் டிஃபெண்டர் மாடலில் இருந்து வி8 என்ஜின் நீக்கப்பட்டாலும் இந்த மாடலின் ஆஃப்-ரோடு வெர்சன்களில் பூஜ்ஜிய ஆர்பிஎம்-ல் முழு டார்க் திறனையும் வெளிப்படுத்தும் அம்சத்துடன் அப்படியே இருக்கும். இதே திறனுடன் தான் கிட்டத்தட்ட டெஸ்லா ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலிலும் உள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

வழக்கமான எரிபொருள் என்ஜினிற்கு மாற்றாக எலக்ட்ரிக் மோட்டார்களை பொருத்தும் வழக்கம் ஆட்டோமோட்டிவ் கலாசாரத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக வால்ஸ் மாகாணத்தை சேர்ந்த எலக்ட்ரிக் கிளாசிக் கார்ஸ் என்ற நிறுவனம் ராயல் எண்ட்பீல்டு பைக்கில் எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி இந்திய மதிப்பில் ரூ.19 லட்சத்தில் விற்பனை கொண்டு வந்திருந்தது.

கிழக்கு கடற்கரை டிஃபெண்டர் மாடல் 6 என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது. இதில் 430 பிஎச்பி செவ்ரோலெட் எல்எஸ்3, 565 பிஎச்பி செவ்ரோலெட் எல்எஸ்3, 320 பிஎச்பி செவ்ரோலெட் எல்சி9, 640 பிஎச்பி செவ்ரோலெட் எல்டி4, 190 பிஎச்பி ரோவர் வி8 (இது தான் ஒரிஜினல்) மற்றும் 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.8 லிட்டர் கம்மின்ஸ் டீசல் என்ஜின் உள்ளிட்டவை அடங்கும்.

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... வி8 என்ஜினை விட எந்த வகையில் சிறந்தது?

கூடுதல் என்ஜின் தேர்வுகளுடன் கஸ்டமைஸேஷன் மற்றும் தேவைக்கு ஏற்ற பாகங்களை பொருத்துதல் உள்ளிட்டவற்றையும் கிளாசிக் லேண்ட் ரோவர் மாடல்களில் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மாடிஃபைட் செய்யப்படும் லேண்ட் ரோவர் கார்கள் கிழக்கு கடற்கரை டிஃபெண்டர் ஆட்டோமோட்டிவ் டிசைன் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Image Courtesy: E.C.D Automotive Design

Most Read Articles
English summary
Land Rover Defender Electric with Tesla powertrain – Better than a V8?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X