2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

சமீபத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாகனத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீ தொகுப்புகளை பற்றி இந்த செய்தியில் விரிவாக விளக்கியுள்ளோம். அவற்றை இனி தொடர்ந்து பார்ப்போம்.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் இந்திய சந்தையில் ரூ.73.98 லட்சத்த்தில் சமீபத்தில் அறிமுகமானது. மூன்று-கதவு ‘90' மற்றும் ஐந்து-கதவு ‘110' என்ற இரு விதமான உடற் அமைப்புகளில் கிடைக்கும் இந்த எஸ்யூவி காரை 5,6 மற்றும் 7-இருக்கை தேர்வுகளிலும் வாங்க முடியும்.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

ஆனால் ஒரே ஒரு 2.0 லிட்டர் இங்கேனியம் பெட்ரோல் என்ஜின் மட்டும்தான் புதிய டிஃபெண்டர் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக இந்த பெட்ரோல் என்ஜின் 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

என்ஜினை போல் ட்ரான்ஸ்மிஷனிற்கும் ஒரே ஒரு 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஆஃப்-ரோடு திறனிற்காக 2020 டிஃபெண்டரில் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் மற்றும் ட்ரான்ஸ்ஃபர் கேஸ் உள்ளிட்டவை நிலையாக வழங்கப்பட்டுள்ளன. இதில் ட்ரான்ஸ்ஃபர் கேஸ் வாகனத்திற்கு குறை-விகித ட்ரைவ் மோட்-ஐ வழங்கும்.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

அணுகுமுறை கோணத்தை 38 டிகிரியிலும், புறப்படும் கோணத்தை 40 டிகிரியிலும், ப்ரேக்-ஓவரை 28 டிகிரியிலும் இந்த எஸ்யூவி வாகனம் கொண்டுள்ளது. 900மிமீ ஆழமுடைய நீர் நிலைகளில் இயங்கும் திறன் கொண்ட புதிய டிஃபெண்டரின் காற்று சஸ்பென்ஷன் அமைப்பு, க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 215மிமீ-ஆக இருக்கும்போது ஒரு விதமாகவும், 292மிமீ-ஆக இருக்கும்போது வேறு விதமாகவும் செயல்படும்.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

இவற்றுடன் எக்ஸ்பெடிஷன் பேக், கன்ட்ரி பேக், அர்பன் பேக் மற்றும் அட்வென்ச்சர் பேக் என்ற நான்கு விதமான ஆக்ஸஸரீ தொகுப்புகள் 2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டருக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

இவற்றில் எக்ஸ்பெடிஷன் தொகுப்பில் முன்பக்க பேஷ் தட்டு, A-ஃப்ரேம் பாதுகாப்பு பார்கள், பயன்படுத்தக்கூடிய கூரை ஏணி, வெளிப்புறத்தில் பக்கவாட்டில் பொருத்தக்கூடிய கேரியர், மேட் கருப்பு நிறத்தில் டிகால்கள் (பொனெட்டில்), ஸ்பேர் வீல் கவர், உயர்த்தப்பட்ட காற்று ஏற்பான், எக்ஸ்பெடிஷன் மேற்கூரை அலமாரி, அனைத்து சக்கரங்களுக்கும் மண் மற்றும் சேறு தடுப்பான் மற்றும் சக்கர வளைவு க்ளாடிங் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

அதாவது இந்த ஆக்ஸஸரீ தொகுப்பை வாங்குவதன் மூலம் இந்த வசதிகளை கூடுதலாக பெறலாம். கன்ட்ரி தொகுப்பில் A-ஃப்ரேம் பாதுகாப்பான் பார்கள், பூட் ஸ்பேஸ் பகிர்வு, அனைத்து சக்கரங்களுக்கும் மட் ஃப்ளாப்ஸ், சக்கர வளைவு க்ளாடிங், எடை குறைவான ரின்ஸ் சிஸ்டம் மற்றும் பின்பக்க ஸ்கஃப் தட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

அர்பன் தொகுப்பில் நகர்புற சாலை பயணத்திற்கு தேவையான 22-இன்ச் அலாய் சக்கரங்கள் (5-ஸ்போக், பளபளப்பான கருப்பு நிறத்தில்), பளிச்சிடும் வண்ணத்தில் பக்கவாட்டு குழாய்கள், ஸ்கஃப் தட்டுகள், முன்பக்க பேஷ் தட்டு, உலோக பெடல்கள் (ஆக்ஸலரேட்டர் மற்றும் ப்ரேக்கிற்கானது) மற்றும் ஸ்பேர் சக்கர கவர் போன்றவற்றை பெறலாம்.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

A-ஃப்ரேம் பாதுகாப்பான் பார்கள், நிலையாக பக்கவாட்டு படிக்கட்டுகள், ஒருங்கிணைக்கப்பட்ட காற்று அமுக்கி, ஸ்பேர் சக்கர கவர், இருக்கையின் பின்பக்க தொகுப்பு, வெளிபுறத்தில் பொருத்தப்பட்ட கேரியர், பின்பக்க ஸ்கஃப் தட்டு, இலகுவான ரின்ஸ் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் மட் ஃப்ளாப்ஸ் போன்றவையை அட்வென்ச்சர் தொகுப்பை வாங்குவதின் மூலம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வாங்க போறீங்களா...? இந்த ஆக்ஸஸரீகள் இருந்தா வாகனம் செமயா இருக்கும்...!

2020 லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் எக்ஸ்ஷோரூம் ரூ.73.98 லட்சத்தில் இருந்து ரூ.89.63 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்து தகவலின்படி அடுத்த ஆண்டு இதன் லைன்அப்பில் 3.0 லிட்டர் பெட்ரோல்/எலக்ட்ரிக் ஹைப்ரீட் என்ஜின் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Most Read Articles

English summary
2020 Land Rover Defender Official Accessory Packages Revealed
Story first published: Saturday, October 17, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X