இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காரை வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியாவில் டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வு மூலம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

இந்த நிலையில் தற்போது லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவிக்கான முன்பதிவுகளை திறந்திருப்பதாகவும், அதை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆஃப்-ரோடு வாகனங்களுக்கு தற்சமயம் மாடர்ன் முன் உதாரண மாடலாக விளங்கும் இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.69.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

வரவிருக்கும் 007 திரைப்படமான நோ டைம் டு டை திரைப்படத்தில் அதன் பாத்திரத்திற்காக ஜேம்ஸ் பாண்ட் எஸ்யூவி என்றும் அழைக்கப்படும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் இந்த எஸ்யூவியின் விலையை ஜாகுவார் அறிவித்தது. இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டரை அறிமுகப்படுத்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வெளியீட்டுத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் கடினமான சூழ்நிலைகளில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் விருப்பமான வாகனமாக விளங்குகிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 300 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

இது 90 (3 கதவு) மற்றும் 110 (5 கதவு) ஆகிய இரண்டு வெவ்வேறு உடல் பாணிகளில் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. இந்த இரு உடற் அமைப்புகளில் பேஸ், எஸ், எஸ்இ, எச்எஸ்இ மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் என்ற ஐந்து விதமான வேரியண்ட்கள் சந்தைப்படுத்தப்படவுள்ளன.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

மேலும் கஸ்டமைஸ்ட் செய்யக்கூடிய இருக்கை அமைப்பு மற்றும் ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் இந்த ஆஃப்-ரோடு பெற்றுவரவுள்ளது. இந்தியாவில் இந்த எஸ்யூவி கார் சிபியூ முறையில் (முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில்) கொண்டு வரப்படவுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

முதன்முதலாக இந்தியாவில் லேண்ட் ரோவர் பிராண்ட் 2009ல் காலடி எடுத்து வைத்தது. அதன் பின்னர் புதிய டிஃபென்டர் மாடல் கார் அறிமுகமாகுவது இதுவே முதல்முறையாகும். 70 ஆண்டு கால வரலாற்றை கொண்ட டிஃபென்டரின் இந்த புதிய தலைமுறை 4x4 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனமாகும்.

இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வரும் லேண்ட் ரோவர் டிஃபென்டர்... முன்பதிவுகள் துவங்கியது...

"உலகெங்கிலும் புகழ்பெற்ற ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்துவது இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனத் தொழிலுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்" என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரோஹித் சூரி கூறியுள்ளார்.

Most Read Articles
English summary
Land Rover Defender SUV bookings open, to launch in India on October 15
Story first published: Friday, September 25, 2020, 2:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X