சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

உலகம் முழுவதும் பிரபலமான ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரின் ஸ்பெஷல் எடிசன் ஃபிப்டி என்ற பெயரில் வெளிவரவுள்ளது. வெறும் 1,970 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு செய்யப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

உலகம் முழுவதிலும் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி மாடலுக்கு கிடைத்த வரவேற்பினால் தற்போது சப்-ப்ராண்ட்டாக உள்ளது. இந்த துணை ப்ராண்டில் இருந்து எவோக், வேலர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் வெளிவந்துள்ளன.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

ரேஞ்ச் ரோவர் மாடலின் முதல் முன்மாதிரி 1967ல் முதன்முறையாக தயாரிக்கப்பட்டது. அதன்பின் இறுதி தோற்றத்தை 1970ல் இந்த கார் பெற்றது. இந்த வகையில் லெஜண்ட்ரி லக்சரி எஸ்யூவி மாடலாக உள்ள ரேஞ்ச் ரோவர் வெளிவந்து 50 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

இதனை நினைவுக்கூறும் விதத்தில் தான் ஃபிப்டி ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்படுகிறது. 1970ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகமானதை வெளிப்படுத்தும் விதமாக 1,970 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனின் விலை குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

ஆட்டோபையோகிராபி விட ப்ரீமியம் தரத்திலான ஸ்டிக்கர் டேக்கை பெறும் என எதிர்பார்க்கப்படும் புதிய ஃபிப்டி ஸ்பெஷல் எடிசன், லைன்அப்பில் எஸ்வி ஆட்டோபையோகிராபி டைனாமிக் வேரியண்டிற்கு அடுத்த நிலையில் உள்ள ஆட்டோபையோகிராபியை தான் அடிப்படையாக கொண்டுள்ளது.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

இதனால் ஸ்பெஷல் எடிசன் காரிலும் சவுகரியம், வசதி, பாதுகாப்பு, இணைப்புகள் மற்றும் ட்ரைவிங் உதவிகள் தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையாக இருக்கும். இந்த வகையில் எடிசன் காரில் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம், பனோராமிக் க்ளாஸ் ரூஃப் மற்றும் அப்டேட்டான எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

வெளிப்புறத்தில் ஃபிப்டி எடிசன், கருப்பு நிற ட்ரிம்களுடன் 22-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பெறவுள்ளது. உட்புறத்தில் டேஸ்போர்டு, கதவு வாசல் ப்ளேட்கள், நம்பர் ப்ளேட், ஹெட்ரெஸ்ட்கள் உள்ளிட்டவற்றில் லேண்ட் ரோவர் டிசைன் இயக்குனர் ஜெர்ரி மெகாகவர்ன் வடிவமைத்த ஃபிப்டி முத்திரை பொருத்தப்பட்டிருக்கும்.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

கார்பதியன் க்ரே, சாண்டோரினி ப்ளாக், ரோசெல்லோ ரெட் மற்றும் அருபா சில்வர் என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ள ஃபிப்டி ஸ்பெஷல் எடிசனை சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் டக்ஸன் ப்ளூ, தவோஸ் வொய்ட் மற்றும் பகாமா கோல்ட் என்ற நிறங்களிலும் பெறலாம்.

சந்தையில் 50 வயதை நிறைவு செய்யும் ரேஞ்ச் ரோவர்... வரலாற்று பதிவாக ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

அத்தகையவர்களுக்கான சிறப்பு சலுகைக்கு லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து எந்த காரணமும் கூறப்படவில்லை. ரேஞ்ச் ரோவரின் முதல் தலைமுறை கார் ஏழு ஷேட்களில் சந்தைப்படுத்தப்பட்டது. ரெகுலர், லாங் வீல்பேஸ் என இரு விதமான வெர்சன்களில் கிடைக்கவுள்ள இதன் ஸ்பெஷல் எடிசனிற்கு ப்ளக்-இன் ஹைப்ரீட் பி400இ உள்பட அதிக எண்ணிக்கையிலான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles
English summary
Range Rover Fifty Special Edition Unveiled; Limited To 1,970 Units
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X