2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

அமெரிக்க சந்தையில் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் உள்ளிட்ட புதிய வசதிகளை 2021 ரேஞ்ச் ரோவர் வேலர் கார் பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியில் பார்ப்போம்.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

அமெரிக்க சந்தையில் ரேஞ்ச் ரோவர் வேலர் முதன்முதலாக 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து 3 வருடங்களாக அங்கு விற்பனையில் இருக்கும் வேலருக்கு 2021ஆம் ஆண்டிற்காக சிறிய அப்கிரேட்கள் மற்றும் அப்டேட்களை ரேஞ்ச் ரோவர் பிராண்ட் வழங்கியுள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

இந்த மாற்றங்களில் முக்கியமானதாக மின்மயமாக்கப்பட்ட என்ஜின் தேர்வு 2021 வேலருக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்ட்டர் மோட்டார் அதன் 3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் பொருத்தப்படவுள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

இந்த என்ஜின் 335 பிஎச்பி/480 என்எம் டார்க் திறன் மற்றும் 395 பிஎச்பி/550 என்எம் டார்க் திறன் என்ற இரு விதமான தேர்வுகளில் கிடைக்கிறது. 0-வில் இருந்து 60 mph வேகத்தை வெறும் 5.2 வினாடிகளில் இந்த எஸ்யூவி மாடல் எட்டிவிடக்கூடியது. ரேஞ்ச் ரோவர் வேலரின் 3.0 லிட்டர் வேரியண்ட்களில் காற்று சஸ்பென்ஷன் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

3.0 லிட்டர் என்ஜின் மட்டுமின்றி 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினும் வேலரில் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினில் எந்த மாற்றமும் 2020 வெர்சனில் இருந்து இல்லை.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

2021ஆம் ஆண்டிற்கான மற்ற அப்கிரேட்கள் என்று பார்த்தால், புதிய பிவி ப்ரோ அட்வான்ஸ்டு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 10.1 இன்ச் தொடுத்திரை உடன் வழங்கப்படவுள்ளது. இதனை உபயோகிப்பது முன்பை காட்டிலும் எளியதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

ஒடிஏ அப்டேட்களை ஏற்கக்கூடியதாக இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ப்ளுடூத் மூலமாக ஒரே நேரத்தில் இரு மொபைல்களை இணைக்க முடியும். இதுமட்டுமின்றி லேண்ட் ரோவரின் முதல் வாகனமாக ஸ்போடிஃபை செயலியையும் இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஏற்றுள்ளது.

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மற்ற அப்கிரேட்களாக கேபின் காற்று சுத்திகரிப்பான் தேர்வு, காரின் இயக்க ஒலியை தவிர்க்கும் சிஸ்டம், 360-கோண கேமிரா உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் 2021 ரேஞ்ச் ரோவர் வேலர் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த ப்ளக்-இன் வேரியண்ட் சர்வதேச சந்தைக்கு மட்டுமே, அமெரிக்க சந்தைக்கு கிடையாது.

Most Read Articles
English summary
2021 Range Rover Velar Gets Mild Hybrid Tech New Features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X