லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

லேண்ட்ரோவர் எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களில் ப்ளக் இன் ஹைப்ரிட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இதனை குறைப்பதற்காக வாகன நிறுவனங்கள் புதிய எரிபொருள் நுட்பத்தில் இயங்கும் வாகனங்களை வடிவமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான யுகம் தற்போது துவங்கி இருக்கிறது. எனினும், சந்தை இன்னமும் வலுவானதாக இல்லை. இதனை மனதில் வைத்தும், பல்வேறு நாடுகளில் கடுமையாக்கப்பட்டு வரும் மாசு உமிழ்வு சட்டங்களை மனதில் வைத்தும் ஹைப்ரிட் வகை மாடல்களை வாகன நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி மாடல்களான எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவற்றில் ப்ளக் இன் வகை ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளன.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல்களின் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலானது P300e என்ற வேரியண்ட் பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களிலும் 15kW திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பின் இருக்கைகளுக்கு கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, மின் மோட்டார் பின்புற ஆக்சிலுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

இதுதவிர்த்து, இந்த இரண்டு ஹைப்ரிட் வகை எஸ்யூவிகளிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று, பின் ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் தனியாக 107 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

எவோக் ஹைப்ரிட் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.4 வினாடிகளிலும், டிஸ்கவரி ஸ்போர்ட் 6.6 வினாடிகளிலும் எட்டும் திறன் பெற்றிருக்கின்றன. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

இந்த ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல் என்பது குறைவான திறன் கொண்ட மின்சார காரில், பெட்ரோல் எஞ்சின் துணையும் இருக்கும் என்பதுதான். அதாவது, இந்த வகை கார்களில் இருக்கும் பேட்டரியை சாதாரண எலெக்ட்ரிக் கார் மூலமாக வெளியில் இருந்து சார்ஜ் ஏற்ற முடியும். அத்துடன், குறிப்பிட்ட தூரம் பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமல் இயக்கும் வாய்ப்பை வழங்கும்.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

இந்த கார்களில் இருக்கும் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண வீட்டு சார்ஜர் மூலமாக 6 மணி 42 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே இயக்க முடியும். அதேபோன்று, மின் மோட்டாரில் மட்டுமே செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 66 கிமீ தூரம் பயணிக்கலாம். அதாவது, பெட்ரோல் எஞ்சின் துணை இல்லாமல் செல்ல முடியும். இதனால், தினசரி போக்குவரத்திற்கு சிறப்பானதாகவும், மிக குறைவான மாசு உமிழ்வு, அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கும்.

லேண்ட்ரோவர் எவோக், டிஸ்கவரி ஸ்போர்ட் கார்களில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம்!

லேண்ட்ரோவர் எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய இரண்டு மாடல்களுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்றன. விரைவில் இந்த ப்ளக் இன் ஹைப்ரிட் வகை தேர்வும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
The new Land Rover Evoque and Land Rover Discovery Sport SUVs has recieved plug-in hybrid electric vehicle (PHEV) technology, delivering the performance, refinement and capability customers expect together with an electric-only range of up to 66km and CO2 emissions as low as 32g/km.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X