ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

ராயல் என்பீல்டு பைக்கை விற்க டீலர் ஒருவர் விலையுயர்ந்த ஜாகுவார் எஃப்-பேஸ் லக்சூரி காரை பயன்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களின் கண் கவர் வாகனங்கள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இவை கவர்ச்சியானதாகவும், அதிக திறன் கொண்டதாகவும் இருக்கின்றன. இருப்பினும் இவற்றால் ஒரு சில இந்திய தயாரிப்புகளிடம் போட்டியிட முடிவதில்லை.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

அந்தவகையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு.

இந்த வரவேற்பு இந்தியாவில் மட்டுமின்றி சில உலக நாடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு இளம் ஆண்கள் மத்தியில் மட்டுமின்றி பெண்களிடமும் நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. இதன்காரணத்தினாலயே ஒரு சில பெண்கள் ஸ்கூட்டர்களுக்கு பதிலாக ராயல் என்பீல்டு பைக்குகளை தங்களின் தனிப்பட்ட பயணத்திற்காக வாங்கி வருகின்றனர்.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் ராயல் என்பீல்டு பைக்குகள் தனித்துவமான இடத்தைக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ட்வின் பைக்குகளில் ஒன்றான இன்டர்செப்டார் 650 மாடலை விற்பனை (மார்க்கெட்டிங்) செய்வதற்காக டீலர் ஒருவர், விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் எஃப்-பேஸ் மாடலை பயன்படுத்தியுள்ளார்.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றதல்ல. இது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லத்வியா (Latvia)-வில் அரங்கேறியிருக்கின்றது.

வைரஸ் அச்சம் காரணமாக தற்போது இந்தியாவில் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவைப் போன்றே உலகின் பல்வேறு நாடுகளில் தடை காலம் நிலவி வருகின்றது.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

இதனால், ஆட்டோமொபைல்ஸ்துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையைக் கையாளும் விதமாகவே வித்தியாசமான புரோமோட்டிங் யுக்தியை லாத்வியா நாட்டைச் சார்ந்த ராயல் என்பீல்டு டீலர் கையாண்டுள்ளார்.

பொதுவாக வாகனங்களை விளம்பரப்படுத்த பெரிய திறந்தவெளி டிரக் வாகனம் அல்லது மேடைகளையே விற்பனையாளர்கள் பயன்படுத்துவர்.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

ஆனால், இங்கு ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை விளம்பரப்படுத்த டீலர் ஒறுவர் ஜாகுவார் எஃப்-பேஸ் காரை பயன்படுத்தியிருக்கின்றார். மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காகவே இம்முறையை அவர் கையாண்டுள்ளார். இந்தியாவில் இதுமாதிரியான விளம்பரங்களுக்கு கேம்ப் அல்லது டாடா ஏஸ் (குட்டி யானை) உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்துவது வழக்கம்.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

ஆனால், இதுபோன்ற யுக்திகளை தவிர்த்தே விநோதமான முயற்சியை டீலர் கையாண்டுள்ளார். அந்த விளம்பரத்தில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கே முன்னிறுத்தப்பட்டுள்ளது. இதன் மற்றுமொரு ட்வின் தோழனான கான்டினென்டல் ஜிடி 650 ஷோரூமில் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

இவ்விரு பைக்குகளும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் இவையிரண்டிலும் ஒரே மாதிரியான திறன் கொண்ட எஞ்ஜின்களே பொருத்தப்பட்டிருக்கின்றது. எனவேதான் இதனை ட்வின் சகோதரர்கள் என ராயல் என்பீல்டு செல்லமாக அழைக்கின்றது.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

எனவே, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு பைக்குகளிலும் 648 சிசி திறனுடைய, பேரல்லல் ட்வின், ஏர்/ஆயில் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ப்யூவல் இன்ஜெக்சன் அம்சத்தைக் கொண்டதாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7,150 ஆர்பிஎம்மில் 46.8 பிஎச்பி சக்தியையும், 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது 5 ஸ்பீட் கியர்பாக்ஸுல் இயங்குகின்றது.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

இத்தகைய திறன் கொண்ட இவ்விரு மாடல்களுக்குமே இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் தற்போது வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆனால், இன்டர்செப்டார் 650 மாடலுக்கான வரவேற்பு கூடுதலாக உள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இன்டர்செப்டார் 650 மட்டுமே மாதம் ஒன்றிற்கு ஏற்றுமதி உட்பட 4,000 முதல் 4,500 யூனிட் வரை விற்பனையை நிர்வகித்து வருகின்றது.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

ஆனால், இந்த வரவேற்பிற்கு தற்போது உலகையே அச்சுறுத்தி கொரோனா தடை கல்லாய் அமைந்துள்ளது. இந்த வைரஸ் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த துறைகளுக்குமே முட்டுக்கட்டையாக அமைந்திருக்கின்றது. இந்த வீழ்ச்சியில் இருந்து தப்பிப்பதற்காகவே ஒவ்வொரு துறையும் தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ராயல் என்பீல்டு பைக்கை விற்க புது யுக்தியை கையாண்ட டீலர்... இதெல்லாம் கொஞ்ச ஓவரா இருக்குங்க...

லாத்வியாவில், இன்டர்செப்டர் 650 அந்நாட்டு மதிப்பில் 86,850 என்ற விலைக்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 5,62,323 என்ற உச்சபட்ச விலைக்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. இது, இந்தியா விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஆகும். இது, இந்தியாவில் ரூ. 2.65 முதல் ரூ. 2.86 லட்சம் வரை விற்பனைக் கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Latvia Dealer Using Jaguar F Pace Car For Promoting Royal Enfield Interceptor 650. Read In Tamil.
Story first published: Wednesday, May 20, 2020, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X