லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் முதலாவதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா குழுமத்தின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக லெக்சஸ் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் லெக்சஸ் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது. பிற சொகுசு கார்களில் இருந்து தனித்துவமான டிசைன் அம்சங்கள் லெக்சஸ் கார்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றன.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

இந்தியாவிலும் குறிப்பிட்ட மாடல்களை லெக்சஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மின்சார கார்களுக்கான யுகம் துவங்கி இருப்பதற்கு தக்கவாறு, தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை லெக்சஸ் உருவாக்கி இருக்கிறது.

MOST READ: ஸ்கோடா ஆக்டேவியா 245 காரின் முதல் லாட் முன்பதிவு நிறைவு?

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

லெக்சஸ் UX 300e என்ற பெயரிலான இந்த மின்சார கார் மாடலானது கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் நடந்த குவாங்ஸோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டு வேரியண்ட்டுகளில் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள லெக்சஸ் யுஎக்ஸ் க்ராஸ்ஓவர் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், லெக்சஸ் யுஎக்ஸ் 300இ கார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

MOST READ: ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

லெக்சஸ் நிறுவனத்தின் GA-C என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த காரின் உருவாக்கப் பணிகள் நடந்தன. இந்த காரின் கட்டமைப்பில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், பயணிகளுக்கு அதிக சப்தமில்லாத அமைதியான சூழலுடன் பயணிக்கும் வாய்ப்பை தரும்.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

லெக்சஸ் யுஎக்ஸ்300இ காரில் 54.3 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். 6.6 kW சாதாரண பேட்டரி சார்ஜரும், 50kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றும் வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

MOST READ: புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

இந்த காரின் மின் மோட்டார் 204 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன்மூலமாக, 0 - 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும்.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

லெக்சஸ் யுஎக்ஸ் 300இ காரில் 12.3 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹீட்டடு மற்றும் வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், டிஜிட்டல் கீ, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 13 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் லெவின்சன் பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.

MOST READ: லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் சீனாவில் அறிமுகம்!

சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு செல்கிறது. அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலும் மின்சார கார் மாடல்களுக்கான வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், நிச்சயம் இந்த கார் மாடல் அல்லது இதன் அடிப்படையிலான மாடலை எதிர்பார்க்கலாம். இதனிடையே, வரும் 2025ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள அனைத்து மாடல்களின் மின்சார மாடல்களையும் அறிமுகப்படுத்த லெக்சஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Lexus has launched UX 300e electric crossover in China this week and will be going to Europe market soon. Here are the some important details of the Lexus UX 300e electric car.
Story first published: Thursday, April 30, 2020, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X