புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

இன்று, ஜூன் 9ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருந்த லெக்ஸஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலான புதிய தலைமுறை ஐஎஸ் காரின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

புதிய ஐஎஸ் மாடலின் அறிமுகம் தாமதமாகியுள்ளது குறித்து லெக்ஸஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய உலகின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, லெக்ஸஸ் புதிய ஐஎஸ் மாடலின் அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

செடான் ரக காரான ஐஎஸ்-ன் தற்போதைய தலைமுறை கார் 2013ல் இருந்து விற்பனையில் உள்ளது. இந்த வகையில் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இதன் புதிய தலைமுறை மாடல் இந்த வருடத்தின் இறுதிக்குள்ளாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

மற்றப்படி புதிய ஐஎஸ் காரின் தோற்றம் குறித்து எந்த தகவலும் இல்லை. வெளியிடப்பட்டுள்ள இதன் டீசர் படமும் காரின் டெயில்லேம்ப்களை மட்டுமே வெளிக்காட்டுகிறது. விரைவில் அறிமுகமாகவுள்ள ஐஎஸ் மாடலானது அதன் நான்காம் தலைமுறை காராகும்.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ், ஆடி ஏ4 மாடல்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ள புதிய ஐஎஸ் மாடலின் டிசைனை கூர்மையான பாகங்களுடன் எதிர்பார்க்கலாம். இதன்படி கூர்மையான டிசைன்களை ஐஎஸ் மாடல் லெக்ஸஸ் இஎஸ் மற்றும் எல்எஸ் மாடல்களில் இருந்து பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

இந்த புதிய செடான் கார் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லாவிடினும், இணையத்தில் வெளியாகியுள்ள சில தகவல்கள் இந்த செடான் மாடல் புதிய டிஎன்ஜிஏ-எல் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

இந்த புதிய ப்ளட்ஃபாரத்தின் மூலமாக காரை எலக்ட்ரிக் வெர்சனிலும் தயாரிக்க முடியும். இதனால் புதிய ஐஎஸ் மாடல் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளுடன் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் இந்த செடான் காரில் வி8 என்ஜின் பொருத்தப்படலாம்.

புதிய தலைமுறை லெக்ஸஸ் ஐஎஸ் மாடலின் உலகளாவிய அறிமுகத்தில் தாமதம்... எல்லாம் கொரோனாவினால் தான்...

லெக்ஸஸ் நிறுவனம் புதிய ஐஎஸ் மாடலின் விபரங்களை சிறிதும் வெளியே கசியாதப்படி கவனமாக பாதுகாத்து வருகிறது. தற்போது இதன் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், இதன் உலகளாவிய அறிமுகத்திற்கான மறுதேதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
Coronavirus Pandemic: New-Gen Lexus IS Global Debut Postponed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X