எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

லெக்ஸஸ் நிறுவனம் அதன் வருங்கால எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

ஒரு காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் லக்சரி மற்றும் செயல்திறன்மிக்க கார்களையும், ரேசிங் கார்களையும் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வந்தன. ஆனால் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களது மொத்த கவனமும் எலக்ட்ரிக் வாகனங்களின் மீதே உள்ளது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

ஆனால் என்னவோ எலக்ட்ரிக் வாகனங்கள் மீது லெக்ஸஸ் ஆரம்பத்தில் அவ்வளவாகவோ ஈடுப்பாடு உடன் இல்லை. ஆனால் தற்போது மற்ற போட்டி நிறுவனங்களுக்கு இணையான எலக்ட்ரிக் வாகன துறையில் நுழைவதற்கு லெக்ஸஸ் நிறுவனத்திற்கு இன்னும் சில படிகள் தான் உள்ளன.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

இந்த இடைவெளியை குறைக்கும் விதத்தில் விரைவில் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்று அடுத்ததாக இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இந்த லெக்ஸஸ் எலக்ட்ரிக் காரின் டீசர் வீடியோ டிஸ்கவர் லெக்ஸஸ் யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் புதிய ‘டைரக்ட்4' ட்ரைவ்ட்ரெயின் தொழிற்நுட்பத்தை லெக்ஸஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த ட்ரைவ்ட்ரெயின் தொழிற்நுட்பம் ஹைப்ரீட் மற்றும் முழு-எலக்ட்ரிக் வாகனங்களின் மின்மயமாக்கல் தத்துவத்தின் மையத்தில் இருக்கும் என்று லெக்ஸஸ் கூறுகிறது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

இந்த அமைப்பு மேம்பட்ட செயல்திறனுக்காக நான்கு சக்கரங்களுக்கும் உடனடி எலக்ட்ரிக் கண்ட்ரோலை வழங்கும். "அதன் (தொழிற்நுட்பம்) செயல்பாடு உள்ளுணர்வு மற்றும் மிகவும் பதிலளிக்கக்கூடியது, இது ஓட்டுநருக்கு வாகனத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பதற்கான உண்மையான உணர்வைத் தருகிறது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

மேலும், இது சக்திவாய்ந்த, நேரியல் முடுக்கம் மற்றும் களிப்பூட்டும் மூலைகளுடன், முன்கணிப்பு மற்றும் உற்சாகத்தின் சிறந்த சமநிலையை வழங்கும். அதே நேரத்தில், இந்த அமைப்பு அமைதி மற்றும் ஆறுதலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது லெக்ஸஸின் உண்மையான டி.என்.ஏ" என்று நிறுவனம் சிறப்பித்து கூறியுள்ளது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டும் லெக்ஸஸ்!! எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்ததாக வெளிவருகிறது..

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. லெக்ஸஸின் தாயக நிறுவனமான டொயோட்டாவும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
Lexus Teses Its Upcoming Electric SUV
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X