இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

இந்தியா சுதந்திரம் பெற்று இந்த வருடத்துடன் 73 வருடங்கள் நிறைவடைகிறது. இந்த சமயத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பிரபலமான சில கார் மாடல்களை பற்றி பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தற்போது நாம் பார்க்கப்போகும் கார்கள் எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் அட்டவணைப்படுத்தப்படவில்லை. மேலும் இவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் நாம் முதலாவதாக பார்க்கபோவது,

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

ரேவா ஐ

இவி ரக காரான இது இந்தியாவில் முதன்முதலாக விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாகும். முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார் இந்தியா உள்பட மொத்தம் 27 நாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. ரேவா ஐ காரை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

டிசி அவந்தி

ஆமாம், தோற்றத்தில் அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் தான் அது அவ்வளவு பிரபலமும் அடையவில்லை. ஆனால் அவந்தி தான் இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். டிசி நிறுவனத்தின் சிறந்த முயற்சியின் வழியாக வெளிவந்த இந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படவில்லை.

ஆனால் ஆரம்பத்திலேயெ இந்தியா வாடிக்கையாளர்களை பெற தவறிவிட்டதால் நீண்ட நாட்களுக்கு சந்தையில் நிலைக்கவில்லை. இந்த காரில் தயாரிப்பு நிறுவனம் 284 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் என்ஜினை பொருத்திவந்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

ஹிந்துஸ்தான் அம்பாசடார்

இந்திய சந்தையில் நீண்டகால பாரம்பரியத்தை கொண்டிருந்த மாடல் தான் ஹிந்துஸ்தான் அம்பாசடார். இந்தியாவிலேயே முதன்முதலாக தயாரிக்கப்பட்ட கார்களின் லிஸ்ட்டில் இருக்கும் இது அம்பி என்ற பெயரால் வாடிக்கையாளர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இது அறிமுகமாகிய வருடம் 1958. பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை கூட்டி வைத்துள்ள இந்த காரை முன்னாள் ஜனாதிபதிகள் கூட பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

டாடா இண்டிகா

இந்திய சந்தையில் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தடம்பதித்த ஹேட்ச்பேக்குகளில் ஒன்றான இண்டிகா தயாரிப்பு நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் தடம் பதிக்க உதவியாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை. டாடா இண்டிகாவிற்கு அந்த சமயத்தில் மாருதி ஜென் கடும் போட்டி மாடாலாக விளங்கியது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

அதுமட்டுமின்றி டாடா இண்டிகா இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிகம் விற்பனையான கார்களின் லிஸ்ட்டில் முதன்மையானதாக விளங்குகிறது. இண்டிகாவின் வெற்றிக்கு பிறகே டாடா நிறுவனம் செடான், எஸ்டேட் மற்றும் கேப்கள் என வெவ்வேறு பிரிவில் நுழைந்தது. ரோவரின் ரீபேட்ஜ்டு வெர்சனான இது மற்ற நாட்டு சந்தைகளில் சிட்டிரோவர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

மஹிந்திரா ஸ்கார்பியோ

இண்டிகா மூலம் டாடா நிறுவனம் நுழைந்த அதே நேரத்தில் தான் ஸ்கார்பியோ மூலம் மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் நுழைந்திருந்தது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாடல்களின் வரிசையில் இருக்கும் இந்த எஸ்யூவி கிட்டத்தட்ட 50 வருடங்களாக தயாரிப்பு நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

2002ல் இருந்து மஹிந்திரா தயாரிப்பாக சந்தையில் விற்பனையில் உள்ள மிகவும் பிரபலமான இந்த மாடல் 2002ல் அறிமுகமானது. விரைவில் இதன் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

டாடா நானோ

டாடா நானோ உலகிலேயே குறைவான விலை கொண்ட காரை தயாரிக்க வேண்டும் என்ற டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் அவர்களது நோக்கத்தால் வெளிவந்த தயாரிப்பாகும். இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விலையில் வெளிவந்த இந்த மாடல் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. இதன் வளர்ச்சிக்கு உலகின் விலை குறைவான கார் என்ற அடையாளமே முக்கிய காரணம்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் இவைதான்... முழுவிபரங்கள் உள்ளே...

இருப்பினும் அந்த கொண்டாட்டம் நீண்ட வருடங்களுக்கு நிலைக்கவில்லை. விற்பனையை அதிகரிக்க பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து இந்த மாடல் பெற்றுவந்தாலும் தயாரிப்பு நிறுவனம் இதன் விற்பனையை விரைவில் நிறுத்திவிட்டது.

இவைதான் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கார்கள் ஆகும். இந்த வகையில் சந்தையில் தடம் பதித்தவைகளாக இவை உள்ளன.

Most Read Articles
English summary
Independence Day: Here Are The Top-Five Famous ‘Made-In-India’ Cars Till Date
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X