பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் மொபைல்போன் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் இருப்பு பெங்களூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

நவீன வகை ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் கார் பேட்டரிகளில் லித்தியம் என்ற கார உலோகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியும், எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்து வரும் இவ்வேளையில், லித்தியத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டியாவில் அணு தாதுகள் இயக்குனரகம் லித்தியம் இருப்பு குறித்து ஆய்வுகளை நடத்தியது. இதில், அப்பகுதியில் லித்தியம் இருப்பு உள்ளது உறுதியாகி இருக்கிறது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

அப்பகுதியில், 14,100 டன் மதிப்புடைய லித்தியம் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள 8.6 மில்லியன் டன் லித்தியம் இருப்பு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 2.8 மில்லியன் மதிப்புடைய லித்தியம் இருப்பும் இருப்பதாக கணிக்கப்பட்டது. அவற்றை ஒப்பிடும்போது இது குறைவான அளவாக கருதப்படுகிறது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

எனினும், எலெக்ட்ரிக் கார் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த சூழலில், பல்வேறு நிறுவனங்களும் அதற்கான பேட்டரி உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகின்றன. அவற்றின் துவக்க நிலைக்கு மண்டியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் இருப்பு கைகொடுக்கும் வாய்ப்புள்ளது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

இதுகுறித்து இந்திய அறிவியல் கழக பேராசிரியர் முனிசந்திரய்யா கூறுகையில்,"தற்போது கிடைத்துள்ள ஆய்வுத் தரவுகளின்படி, Li20 என்ற லித்தியம் இருப்பு மண்டியாவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளது தெரிய வந்துள்ளது. இங்கு 14,100 டன் அளவுக்கு இருப்பு உள்ளதாக தெரிகிறது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

சிலி, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகள் நாடுகளை ஒப்பிடும்போது இது குறைவுதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

உலக அளவில் 15 மில்லியன் டன் லித்தியம் இருப்பு இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் பேட்டரிகளில் லித்தியம் அதிக அளவில் பயன்படுத்துவதால், இதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா?

இந்த நிலையில், பெங்களூர் அருகே அரிய வகையிலான லித்தியம் கார உலோகம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது, மின்சார வாகன உற்பத்தி துறையின் கவனத்தை ஈர்ப்பதாகவே அமைந்துள்ளது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரியால்தான் விலை அதிகம் நிர்ணயிக்கப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உள்நாட்டிலேயே லித்தியம் உற்பத்தி செய்யும்போது, மின்சார வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் விலை குறைய வாய்ப்பு ஏற்படலாம்.

Most Read Articles
English summary
Atomic Minerals Directorate's researches, have found rare lithium reserves of 14,100 tonnes in Mandya, Karnataka.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X