ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..

அதிக கட்டணம் வசூலிக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ஆப்பு வைக்கின்ற வகையில் மலிவு விலை ஏசி பேருந்தை குறிப்பிட்ட நகரத்தில் புகழ்வாய்ந்த அமைப்பு ஒன்று அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

பெரும்பாலான நகரங்களில் இயக்கப்படும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் அதிக கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சிறு துளியளவும் சொகுசு வசதி என்பது காணப்படுவதற்கான வாய்ப்பே அவற்றில் இருக்காது. போதாக்குறைக்கு கட்டணமும் மிக மிக அதிகமாக இருக்கும். இதுபோன்ற காரணத்தினாலயே வாகன ஓட்டிகள் தனியார் வாடகை வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர்.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

குறிப்பாக, தனியார் வாடகை வாகனங்கள் அதிக சொகுசு மற்றும் ஏசி போன்ற வசதிகளை உள்ளடக்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், இதில் கூட்ட நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் மட்டுமே, நமக்காகவே அந்த கார் என்பதைப் போன்ற எண்ணத்தில், நமது இலக்கு வரும்வரை தனியாக பயணிக்க முடியும்.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

பொது போக்குவரத்து வாகனத்தில் இதனை துளியளவும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக, அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் பொதுத்துறை வாகனத்தில் பயணிப்பவர்கள் நசுங்கி, பிழிந்தபடிதான் பயணம் செய்ய முடியும்.

அந்தளவிற்கு கூட்ட நெரிசல் அலைமோதும். இந்நிலையில், இந்த பார்சல் போன்ற பயணத்திற்கு முற்று புள்ளி வைக்கின்ற வகையில் மலிவு கட்டணத்தில் ஏசி பேருந்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

ஆனால், இது நமது தமிழகத்தில் அல்ல. இந்த தகவல் உங்களுக்கு மட்டுமில்லைங்க, எங்களுக்கும் வேதனையாகதான் இருக்கின்றது. அப்போ, எங்கேதான் இந்த சிறப்பு சேவை தொடங்கப்பட்டிருக்கு என்று கேட்கிறீர்களா..? இந்த பிரத்யேகமான சேவை மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

இந்த சிறப்பு சேவை தனியார் வாகனங்களின் அதிக கட்டண கொள்ளைக்கு ஆப்பு வைக்கின்ற மிக மிக மலிவான கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை, மஹாராஷ்டிராவின் மிகப்பெரிய மின்வாரியம் மற்றும் போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட் (பிரஹன் மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து) அமைப்பு வழங்கவுள்ளது.

இந்த ஏசி பேருந்தில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட இருக்கின்றது.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

இந்த ஏசி பேருந்தில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட இருக்கின்றது.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், மும்பையின் டி2 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அருகில் இருக்கும் இரயில் நிலயைத்திற்கு செல்ல அந்த பயணி ரூ. 6 மட்டுமே ஏசி பேருந்தில் பயணிப்பதற்கு கட்டணமாக செலுத்தினால் போதும்.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

இந்த தரமான சேவையை பெஸ்ட் குழுமம் கடந்த ஹோலி பண்டிகை தினத்தில் இருந்து இயக்கி வருகின்றது.

இந்த புதிய ஏசி பஸ் சேவை ஏற்கனவே அந்தேரி பகுதியில் இருந்து டி2 சர்வதேச விமான நிலையம் வரை இயக்கப்பட்டு வருகின்றது.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

இத்துடன், கூடுதலாக மேலும் இரு வழித்தடங்களுக்கு மலிவு கட்டண ஏசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இனி அந்தேரியன் மேற்கு பகுதியான அகர்கர் சவுக் பகுதியில் இருந்து மஜாஸ் (எம்எச்ஏடிஏ) பகுதிக்கும், அகர்கர் சவுக் பகுதியில் இருந்து சாஹர் கார்கோ காம்பளக்ஸ் ஆகிய இரு வழித்தடங்களிலும் புதிதாக இந்த சேவை இயக்கப்பட இருக்கின்றது.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

இந்த ரூட்களில் மலிவு கட்டண ஏசி பேருந்து சேவை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படும் என பெஸ்ட் சார்பில் கூறப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, இப்பேருந்துகள் மேற்கூறிய வழித்தடங்களில் பத்து நிமிடங்களுக்கு ஒரு இயக்கப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.

ரூ. 6 கட்டணத்தில் ஏசி பஸ் பயணம்... அதிரடி காட்டவிருக்கும் நகரம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்..!

மலிவு விலையைக் கொண்டிருப்பதாலும், ஏசி போன்ற சௌகரியமான வசதியையும் கொண்டிருப்பதாலும் மக்கள் இந்த பேருந்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறிப்பாக, தினந்தோறும் பொது வாகனங்களில் பயணிக்கும் பயனர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பையும், ஆதரவையும் இந்த மலிவு விலை பேருந்து பெற்றிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Low Cost AC Bus In Mumbai. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X