பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், நாட்டின் மிகப் பெரிய வங்கி என்ற பெயரைக் கொண்டிருக்கும் எஸ்பிஜ உடன் கூட்டணி தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை நுகர வரும் வாடிக்கையாளர்களுக்கு எளிய கடன் வசதியைப் பெற்று தரும் நோக்கில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

குறைந்த வட்டி மற்றும் எளிய கடன் உதவிகளை மையக் கருத்தாகக் கொண்டே இந்த கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் வங்கியாக எஸ்பிஐ உள்ளது. இதனுடன் பென்ஸ் கூட்டணியைத் தொடங்கியிருப்பது அதன் வாடிக்கையாளர்களால் எளிதில் வங்கிக் கடனைப் பெற முடியும் என நம்பப்படுகின்றது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

இதனால், சொகுசு கார் உற்பத்தியாளரால் கணிசமான விற்பனை அதிகரிப்பைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஸ்பிஜ வங்கியின் செல்போன் செயலிகளில் ஒன்றான 'யோனோ' ஆப்பில் இதற்கான பிரத்யேக ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வங்கியின் கடன் உதவியை நாடுவோருக்கு சிறப்பு நன்மையாக ரூ. 25 ஆயிரம் மதிப்பில் ஆச்சரிய பரிசு வழங்கப்பட இருக்கின்றது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

இது பரிசாகவோ அல்லது சிறப்பு சலுகையாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதனை டீலர்களே வழங்க இருக்கின்றனர். இந்த சிறப்பு சலுகை யோனோ செல்போன் செயலி மூலம் பென்ஸ் காரை புக் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகின்றது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

அதேசமயம், இந்த சிறப்பு சலுகை வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாகவே சொகுசு கார் உற்பத்தியாளரான பென்ஸ், வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் அதி தீவிரம் காட்டி வருகின்றது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

இதனடிப்படையிலேயே நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ உடன் புதிய கூட்டணியை அது தொடங்கியுள்ளது. இதுபோன்ற தனித்துவமான செயல்களின் காரணமாக இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் நல்ல டிமாண்டைப் பெற தொடங்கியிருக்கின்றது.

பென்ஸ் - எஸ்பிஐ வங்கி கூட்டணி... ஆஹா தரமான சம்பவம்... இனி குறைந்த வட்டியில் சொகுசு கார்களை வாங்கலாம்!

சமீபத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 550 கார்களை ஒரே நாளில் பென்ஸ் இந்தியாவில் டெலிவரி கொடுத்தது. ஆயுதபூஜை பண்டிகையன்றே இந்த தரமான சம்பவத்தை அது செய்திருந்தது. இந்த 550 கார்களில் பெரும்பாலான கார்கள் டெல்லி என்சிஆர், மும்பை, குஜராத் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் தான் டெலிவிரி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
Luxury Car Maker Mercedes Benz Ties Up With SBI For Easy Car Finance. Read In Tamil.
Story first published: Tuesday, November 24, 2020, 18:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X