இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

கடந்த 2020 நவம்பர் மாதத்தில் விற்பனையான சொகுசு கார்களை பற்றிய பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் மூலம் கிடைக்க பெற்றுள்ள இதுகுறித்த தகவல்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் வழக்கம்போல் விற்பனையில் மற்ற சொகுசு கார் நிறுவனங்களை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மட்டும் 897 பென்ஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மாதம் விற்பனையான மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும். இருப்பினும் 2019 நவம்பர் மாதத்தில் 1,223 மெர்சிடிஸ் கார் மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தை தொடர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனம் பிடித்து வருகிறது. இம்முறை மெர்சிடிஸ் நிறுவனத்துடன் மிக நெருக்கமாக வந்துள்ள பிஎம்டபிள்யூ கடந்த மாதத்தில் 728 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

இதன் இந்த விற்பனை எண்ணிக்கையும் 2019 நவம்பரை காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அதேநேரம் முந்தைய 2020 அக்டோபரை (573) காட்டிலும் 27.05 சதவீதம் அதிகமாகும். இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள நிறுவனங்கள் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே உள்ளன.

இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

இதில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஃபோக்ஸ்வேகன் ஆடி நிறுவனம் 236 மாதிரி கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்திலும் இதே நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட இதே அளவிலான கார்களையே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

4வது மற்றும் 5வது இடங்களில் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் வால்வோ நிறுவனங்கள் முறையே 199 மற்றும் 169 விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளன. இவற்றிற்கு அடுத்துள்ள போர்ஷே 27 கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

Rank Model Nov'20 Nov'19 Growth (%)
1 Mercedes-Benz 897 1223 -26.66
2 BMW 728 954 -23.69
3 Volkswagen Audi 236 260 -9.23
4 Jaguar Land Rover 199 317 -37.22
5 Volvo 169 196 -13.78
6 Porsche 27 33 -18.18
7 Lamborghini 4 1 300.00
8 Ferrari 1 3 -66.67
9 Rolls-Royce 1 4 -75.00
10 Bentley 0 3 -100.00
இந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல!! அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...

4 லம்போர்கினி, ஒரு ஃபெராரி மற்றும் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் கடந்த 2020 நவம்பரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாதத்திற்கு ஒரு லம்போர்கினி கார் தான் நம் நாட்டில் விற்பனையாகும். ஆனால் கடந்த மாதத்தில் 4 லம்போர்கினி கார்கள் விற்கப்பட்டுள்ளன. அதேநேரம் கடந்த மாதத்தில் ஒரு பெண்ட்லீ கார் கூட விற்பனையாகவில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Luxury Car Retail Sales Nov 2020 – Mercedes, BMW, Audi, JLR, Volvo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X