Just In
- 6 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதுகாப்பில் உலகையே திரும்பி பார்க்க வைத்த 'மேட் இன் இந்தியா' கார்கள்... விலை ரொம்ப அதிகம்லா இல்லீங்க...
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, உலகின் கவனத்தை ஈர்த்த 'மேட் இன் இந்தியா' கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் முன்பெல்லாம் கார் வாங்கும் ஒருவர், விலை, மைலேஜ், டிசைன், வசதிகள் ஆகியவற்றுக்குதான் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் பாதுகாப்பும் தற்போது கார் வாங்குவதை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக மாறியுள்ளது. எனினும் அனைத்து நிறுவனங்களும், மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில்லை.

குளோபல் என்சிஏபி அமைப்பு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை தொடர்ச்சியாக மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இந்த மோதல் சோதனைகளில் இதுவரை 3 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. அவை என்னென்ன கார்கள்? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

1. மஹிந்திரா எக்ஸ்யூவி300
விலை: 7.94 லட்ச ரூபாய் முதல் 12.29 லட்ச ரூபாய் வரை
இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். 7.94 லட்ச ரூபாய் முதல் 12.29 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையாகி வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். தற்போதைய நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிகவும் பாதுகாப்பான கார் இதுதான்.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையாக 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், 7 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் ஒரே ஒரு கார் என்ற பெருமையும் மஹிந்திரா எஸ்யூவி300 காரைதான் சேரும். ஆனால் டாப் வேரியண்ட்டில் மட்டுமே 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 110 பிஎஸ் பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர 1.5 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்களுடன், மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிட்டு வருகிறது.

2. டாடா அல்ட்ராஸ்
விலை: 5.44 லட்ச ரூபாய் முதல் 8.95 லட்ச ரூபாய் வரை
இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். 5.44 லட்ச ரூபாய் முதல் 8.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா அல்ட்ராஸ் விற்பனையாகி வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற இந்தியாவின் ஒரே பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா அல்ட்ராஸ்தான்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பில், 3 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 2 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸ் காரில், 86 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

இதுதவிர 90 பிஎஸ் பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வையும் டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. மாருதி சுஸுகி பலேனோ, சமீபத்தில் விற்பனைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது.

3. டாடா நெக்ஸான்
விலை: 6.99 லட்ச ரூபாய் முதல் 12.70 லட்ச ரூபாய் வரை
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை போல், இதுவும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான். 6.99 லட்ச ரூபாய் முதல் 12.70 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில், டாடா நெக்ஸான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது அனைத்தையும் தொடங்கி வைத்த கார் டாடா நெக்ஸான்தான்.

ஆம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை முழுமையாக பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் இதுதான். இதற்கு பிறகுதான் மஹிந்திரா எக்ஸயூவி300 காரும், டாடா அல்ட்ராஸ் காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை தன்வசப்படுத்தின.

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் டாடா நெக்ஸான், 3 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் டாடா நெக்ஸான் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வும் இந்த காரில் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.