வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார காரை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் (2020) சற்று அதிகரித்துக் காணப்படுவதை நம்மால் காண முடிகின்றது. இதனால், முன்பு அரிதினும் அரிதாக தென்பட்டு வந்த மின்சார வாகனங்கள் தற்போது நாள் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு வாகங்களாவது நம் கண்களில் சிக்கி விடுகின்றன.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

அந்தளவிற்கு மின்சார வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் மற்றும் டாடா நெக்ஸான் இவி ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட சூப்பர் லக்சூரி மின்சார கார் ஒன்று தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரவைக் டைனமிக்ஸ் எனும் நிறுவனமே அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் செடான் ரக காரை வெளியீடு செய்திருக்கின்றது. விரைவில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகமாகவும் இருக்கின்றது. எனவே அடுத்தாண்டின் இறுதிக்குள் இக்கார் விற்பனை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

இந்த காரின் தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகள் அனைத்தும், நிஜமாகவே இக்கார் இந்திய தயாரிப்புதானா என்று கேள்வியெழுப்புகின்ற அளவிற்கு மிகவும் தனித்துவமான ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. எனவேதான் இக்கார் பற்றிய தகவல் வெளியாகிய முதல் நாளில் இருந்தே இந்தியர்கள் பலர் இதன் அறிமுகத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

இத்தகையோரை குதூகளமாக்குகின்ற வகையில் தற்போது பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எக்கே1 மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பிரவைக் நிறுவனம் இந்த காரை வருடம் ஒன்றிற்கு 250 யூனிட்டுகளை விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

முதல் கட்டமாக தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இதைத் தொடர்ந்து மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் களமிறக்கப்பட உள்ளது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

மேலும், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்க லீஸ் மற்றும் வாடகை சேவைகளிலும் இக்காரை ஈடுபடுத்த பிரவைக் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், இக்கார் சற்று விலையுயர்ந்த மின்சார காராக விற்பனைக்கு வந்தாலும், பலரால் பயன்படுத்தப்பட முடியும் என தெரிகின்றது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

இந்த காரின் விலை பற்றிய தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் உருவாக்கிடாத டிசைன் மற்றும் வசதிகளுடன் பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார கார் தயாராகியிருக்கின்றது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

ஒற்றை உலோக துண்டினால் தயார் செய்யப்பட்ட ரூஃப், எல்இடி புரொஜக்டர் ஹெட்லேம்ப் (மெல்லிய இழைப் போன்று இரு முனைகளையும் தொட்டவாறு காட்சியளிக்கும்), இதேபோன்று பின்பக்க சிவப்பு நிற மின் விளக்கும் மெல்லிய இழைப் போல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவையனைத்தும் சேர்ந்து மின்சார காரை கவர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கின்றன.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

இதுபோன்று பன்முக வசதிகளுடன் பிரவைக் எக்ஸ்டிங்க்சன் மின்சார கார் தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இக்காரை 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும் என்பது மிகவும் கவர்ச்சிகரமான வசதியாக இருக்கின்றது. தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான கார்களை சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் தேவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

மேலும், இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 504 கிமீ தூரம் பயணிக்கலாம். இதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 150கிலோவாட் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 196 கிமீ ஆகும். உச்சபட்சமாக இக்காரில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் 2400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

இதுதவிர, ஹெப்பா ஏர் ஃபில்டர், 8 ஏர் பேக்குகள், மீளுருவாக்கம் செய்யக்கூடிய பிரேக்குகள், ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இடம்பெற்றிருக்கும் இந்த அம்சங்கள் அனைத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக காரையே தோற்கடிக்கும் வகையில் இருக்கின்றது.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

மேற்கூறிய பாதுகாப்பு வசதிகளை இக்கார் கொண்டிருப்பதால் புதிய பிரவைக் எக்ஸ்டிங்க்சன் மின்சார கார் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் என அதன் தயாரிப்பு நிறுவனம் கூறுகின்றது. இந்த கூற்றிற்கேற்ப இக்கார் ஏதேனும் மோதல் பரிசோதனையை மேற்கொண்டதா என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

வெளியானது மேட்-இன்-இந்தியா மின்சார கார்... வெடவெடுத்து நிற்கும் எம்ஜி, ஹூண்டாய்... அடுத்தது விற்பனைதான்...

மேலும், இக்காரின் உட்புற அம்சங்கள் பற்றிய தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. தொடர்ந்து, இதன் தயாரிப்பு பணிகளும் சற்று தொலைவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இதன் விற்பனை அறிமுகத்திற்கு கூடுதல் சில காலங்கள் தேவைப்படலாம் என கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Made In India Pravaig Extinction Electric Car Unveiled. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X