டாக்சி டிரைவர்களின் பேராசைக்கு ஆப்பு வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

டாக்சி டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு குறிப்பிட்ட மாநில அரசு செக் வைத்திருக்கின்றது. அது எந்த மாநிலம், எப்படி செக் வைத்திருக்கின்றது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

நாட்டில் பொது போக்குவரத்து சேவையில் அரசு வாகனங்களைக் காட்டிலும் தனியார் வாடகை வாகனங்களின் ஆதிக்கமே அதிகம் காணப்படுகின்றது.

இதற்கு அரசு வாகனங்களின் பற்றாக்குறை ஒரு புறமிருக்க, அலைமோதும் கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் இலக்கைச் சென்றடையும் மக்கள் அதிகமாக செலவாகினும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் தனியார் வாடகை வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

இதனால், நாட்டில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வாடகை வாகனங்கள் செய்து வருகின்றது. அதிலும், ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களின் வாடகை வாகனங்கள் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் சலுகைகளை வாரி வழங்கிய இந்நிறுவனங்கள் தற்போது பகல் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் கேப் டிரைவர்கள் பயணிகளிடம் தேவையற்ற கட்டணங்களை வசூலித்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

இதுகுறித்து, பயணிகள் அவ்வப்போது புகாரளித்தும் வாடகை வாகன நிறுவனங்களிடம் இருந்து எந்தவொரு தக்க பதிலும் கிடைப்பதில்லை என வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், வாடிக்கையாளர் சேவைக்கென்று தனி அழைப்பு மையம் இல்லை என்றும் வாடகை வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

இதுபோன்ற பல்வேறு இடைவெளிகளின் காரணமாக சில கேப் டிரைவர்கள் பொதுமக்களிடம் வெயிட்டிங் சார்ஜ், ஷர்ஜ் சார்ஜ் என சில தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.

இதனால், சாதாரணமாக 40 ரூபாயில் செல்ல வேண்டியதிற்கு ரூ.60 முதல் ரூ.80 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அதிலும், திருவிழாக் காலம், முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்கள் என்றால் தானாகவே சர்ஜ் ஆக்டிவேட் ஆகிவிடும்.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

அப்போது, வாடகை கட்டணம் இரு மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் அரசு பேருந்துகளை நம்பி பயனில்லை என்று நினைக்கும் பொதுமக்கள் மிக அதிக கட்டணத்தைச் செலுத்தி வாடகை வாகனங்கள்மூலம் வீடு சேறுகின்றனர்.

இதுபோன்ற அவலநிலையை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா மாநில அரசு புதிய கட்டண கொள்கையை ஒன்றை மாநிலம் முழுதும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

மாஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 75,000 மஞ்சள் மற்றும் கருப்பு நிற வாடகை வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இத்துடன், 10 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் வாடகை சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வாகனங்களில் முறையற்ற அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழந்த வண்ணம் இருந்தன.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

ஆகையால், அரசு சார்பில் கட்டண கொள்ளைக்கு தீர்வு காணும் விதமாக கத்துவா கமிட்டி என்ற குழுவை அமைக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த குழு செயல்பட ஆரம்பித்தது.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

இது, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிசி கத்துவாவின் தலைமையில் இயங்கும் நான்கு அதிகாரிகள் கொண்ட குழுவாகும். இந்த குழுவின் பணி, கடந்த 2012ம் ஆண்டு தனி நபர் குழுவான ஹக்கீம் பேனல் கொண்டு வந்த கட்டண திட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வதாகும்.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

இது மாநிலம் முழுவதும் வாடகை வாகனங்கள் வசூலிக்கும் கட்டணம் குறித்த ஆய்வைச் செய்து தற்போது நடு நிலையான புதிய கட்டணத்தை அறிவித்திருக்கின்றது.

அந்தவகையில், கத்துவா குழு வழங்கிய புதிய கட்டண திட்டத்திற்கு மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. அதில், ஆரம்பநிலை கட்டணத்தில் இருந்து வாடகை வாகனங்கள் மூன்று நிலையாக ஷர்ஜ் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

கத்துவா வழங்கிய அறிக்கையின்படி, புதிய கட்டணமாக ரூ. 14 மற்றும் ரூ. 16 ஒரு கிமீ இருக்க வேண்டும் என்றும் இந்த கட்டணம் வழக்கமான கேப்கள், நடுத்தர அளவு மற்றும் பிரிமியம் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதேபோன்று, உயர்நிலை வாகனங்களுக்கு ஆரம்ப கட்டணமாக 26 ரூபாயும், ஷர்ஜ் நேரத்தைப் பொருத்து வாகனத்தின் உயர்நிலையைக் கொண்டு ரூ. 32 முதல் 38 ரூபாயாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேப் டிரைவர்களின் பகல் கொள்ளைக்கு செக் வைத்த மாநில அரசு... எந்த மாநிலம்..? எப்படினு தெரியுமா..?

கத்துவா கமிட்டி வழங்கிய இந்த கட்டண விகிதத்தை கருப்பு மற்றும் மஞ்சள் நிற வாடகை வாகனங்கள் முதல் ஆட்டோக்கள் வரை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தற்போது, மஹாராஷ்டிராவில் பயன்பாட்டில் இருக்கும் வாடகை வாகனங்கள் கட்டணமாக ரூ. 18 முதல் 22 வரை ஒரு கிமீ வசூலித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maharashtra Approves Fixing Cap Fares For App Based Cap Service. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X