பிரபல கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்! இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

தமிழகம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளநிலையில் பிரபல மின்சார கார் நிறுவனத்தை தங்கள் மாநிலத்தின் பக்கம் கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

உலகளவில் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா உருவாகியுள்ளது. இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்பும் வாகன ஆர்வலர்களைத் தூண்டும் வகையில் உள்ளது. குறிப்பாக, இந்தியர்களை இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக அதிகளவில் கவர்ந்து வருகின்றது. ஆனால், இதன் ஒரு தயாரிப்புகூட இந்தியாவில் தற்போது வரை விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது வறுத்தமளிக்கும் தகவல்.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

அதேசமயம், டெஸ்லா நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வைத்து பார்க்கையில், இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பது தெரியவந்துள்ளது. ஆம், இந்தியாவில் விற்பனையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் டெஸ்லா நிறுவனம் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

கடந்த 2016ம் ஆண்டே இந்நிறுவனம் முதல் முறையாக இந்த உலகில் அறிமுகமாகியது. அப்போது, உலகின் பல்வேறு நாடுகளில் அதன் மாடல் 3 மின்சார காருக்கான புக்கிங் வரவேற்கப்பட்டது. இதில் இந்தியாவும் அடங்கும். ஆனால், தற்போது வரை இந்தியாவில் இருந்து புக்கிங் செய்தவர்களுக்கு மின்சார வாகனம் டெலிவரி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நான்கு வருடங்கள் கடந்துள்ளநிலையில் தற்போது இந்தியாவில் களமிறங்குவதற்கான பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

இதனைக் கருத்தில் கொண்டு மஹாராஷ்டிரா மாநிலம், தங்களின் மாநிலத்தில் வாகன உற்பத்தி ஆலையைத் தொடங்குமாறு டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாநிலத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட டுவீட்டில், "தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் மாநிலத்தில் மின்வாகன உற்பத்தி மையத்தை நிறுவுவதுகுறித்து டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ உடன் பேசியிருப்பதாக" கூறியுள்ளார். மேலும், இந்த கலந்துரையாடலின்போது தங்கள் மாநிலத்தில் உற்பத்தி ஆலையை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

சமீபத்தில், பெங்களூருவில் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆராய்ச்சி மையத்தை நிறுவ திட்டமிட்டிருப்பதாக டெஸ்லா நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கான பேச்சு வார்த்தையில் செய்ய இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் அது கூறியிருந்தது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மஹாராஷ்டிரா மாநில அரசு தங்கள் மாநிலத்தின் பக்கம் டெஸ்லாவை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

மஹாராஷ்டிரா மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சியை தமிழகம் கடந்த ஆண்டே செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார். தமிழகத்திற்கு புதிய முதலீட்டை ஈர்க்கும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை பயணம் செய்தபோதே இதற்கான அடித்தளத்தை அவர் செய்தார்.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

இங்கிலாந்து நாட்டிற்கு முதலில் பயணித்த அவர் அங்குள்ள முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களை நேரில் முதலீட்டிற்கான அழைப்பை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள டெஸ்லா மின்சா கார் உற்பத்தி ஆலையை நேரில் பார்வையிட்டார். அப்போதே மின்சார கார் உற்பத்திக்கான ஆலையை தமிழகத்தில் அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

இதற்காக பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இதுதவரி பல்வேறு சிறப்பு கலந்துரையாடலும் அப்போது அரங்கேறியது. இதுகுறித்து கூடுதலாக அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மஹாராஷ்டிரா மாநில அரசு இரண்டாவது நபராக டெஸ்லாவை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

ஆகையால், டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பாலை எங்கு அமையும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் பெங்களூரு, தற்போது இந்நிறுவனம் தனது மின்சார கார்களுக்கான ஆராய்ச்சி மையத்தை பெங்களூருவில் அமைக்க இருக்கின்றநிலையில் இரு மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

ஆகையால், எதிர்காலத்தில் கர்நாடகா அல்லது தமிழகம் அல்லது மஹாராஷ்டிரா இவற்றில் ஏதேனும் ஒன்றில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், மஹாராஷ்டிரா இதில் மூக்கை நுழைத்திருப்பதால் தமிழகத்தில் டெஸ்லா ஆலை வருவதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பிரபல மின்சார கார் நிறுவனத்தை கவரும் முயற்சியில் இந்தியாவின் பணக்கார மாநிலம்... இதுலகூட தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

அதேசமயம், ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மின்சார கார் உற்பத்தி தமிழகத்தில் செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் தயாரிப்பு ஆலை அமைவதற்கான வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. ஆகையால், டெஸ்லா நாட்டில் கால் தடம் பதிக்கும் வரை அது எங்கு வாகன உற்பத்தி ஆலையைத் தொடங்கும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலுமே நீடித்த வண்ணமே இருக்கும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான இந்த போட்டி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Maharashtra Invites US Electric-Car Maker Tesla. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X